Rashmika Mandanna
Rashmika Mandanna
நடிகை ராஷ்மிகா மந்தா தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி பிறந்த அவர், 2016 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான க்ரிக் பார்ட்டி படம் மூலம் நடிகையாக எண்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படம் ராஷ்மிகாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அவருக்கு தெலுங்கு திரையுலகில் தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இதனைத் தொடர்ந்து தமிழில் 2021 ஆம் ஆண்டு சுல்தான் படத்தின் மூலம் அடியெடுத்து வைத்தார். அப்படம் ராஷ்மிகாவுக்கு சிறந்த படமாக அமைந்தது. இதன் பின்னர் முன்னணி நடிகரான விஜய்யுடன் வாரிசு படத்தில் தமிழிலும் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். 2022 ஆம் ஆண்டு குட் பை படம் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்த ராஷ்மிகா மந்தனாவுக்கு தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல தொடர்ச்சியாக முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். அவரைப் பற்றிய தகவல்களை எல்லாம் செய்திகளாக நாம் இந்த தொகுப்பில் காணலாம்.