Ration Card
ரேஷன் அட்டை என்பது இந்திய குடும்பங்களின் அடையாள அட்டையாக உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் அட்டை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றார் போல் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள் மாறுபடும். அந்த வகையில், தமிழ்நாட்டில் ரேஷன் அட்டை மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக அரசி வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி கோதுமை, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் அட்டை திட்டத்தின் மூலம் ஏராளமான குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன. பயனர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ரேஷன் அட்டைகள் வகைப்படுத்தப்படுகின்றன. அதன்படி, பொருளாதார நிலையில் மிகவும் குறைவாக உள்ளவர்களுக்கு PHH ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது. இதெபோல வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு PHH-AAY ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது. பெரிய பொருளாதார சிக்கல்கள் இல்லாத குடும்பங்களுக்கு NPHH ரேஷன் அட்டையும், பொருளாதார பாதிப்புகள் இல்லாத குடும்பங்களுக்கு NPHH-S ரேஷன் அட்டையும் வழங்கப்படுகிறது. மேலும், பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு NPHH-NC ரேஷன் அட்டை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.