Rishabh Pant
ரிஷப் பண்ட்
இந்திய அணியில் தற்போது தவிர்க்க முடியாத விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வலம் வருகிறார் ரிஷப் பண்ட். இவர் 04 அக்டோபர் 1997ம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ருகாடியில் பிறந்தார். தனது 12 வயதில் கிரிக்கெட் விளையாட தொடங்கிய ரிஷப் பண்ட், அதன்பிறகு அம்மாவுடன் உத்தரகண்டில் இருந்து டெல்லிக்காக பயிற்சிக்கு வந்தார். டெல்லி வந்த ரிஷப் பண்ட் சோனெட் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தார். முதன்முறையாக டெல்லி வந்தபோது, ரிஷப் பண்ட் தனது தாயுடன் தங்க இடம் இல்லாமல் குருத்வாராவில் உள்ள் சாலையில் இரவை கழித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ரிஷப் பண்ட் தனது ஆரம்ப கல்வி மற்றும் கிரிக்கெட்டை டெல்லியிலேயே கற்று, விரைவில் அண்டர் – 19 இந்திய அணியில் இடம் பிடித்தார். 2017ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவுக்காக அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றார் ரிஷப் பண்ட். இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அறிமுகமான ரிஷப் பண்ட், அந்த போட்டியில் 3 பந்துகளை சந்தித்து 5 ரன்களில் அவுட்டானார். அதற்கு பிறகு, விஸ்வரூபம் எடுத்த ரிஷப் பண்ட் தொடர்ந்து நல்ல இன்னிங்ஸை விளையாடி, இன்று பண்ட் இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக உள்ளார்.