5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Rohit Sharma

Rohit Sharma

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 30 ஏப்ரல் 1987 அன்று நாக்பூரில் பிறந்தார். ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதங்கள் அடித்துள்ள ரோஹித் சர்மா, தற்போது இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். சமீபத்தில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றது. ரோஹித் சர்மா தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆஃப் ஸ்பின்னராக தொடங்கினார் என்பது மிக சிலருக்கே தெரியும். ஆனால், பயிற்சியாளர் தினேஷ் லாட் ரோஹித் சர்மாவின் பேட்டிங் திறமையை அறிந்ததும், அவரை நேரடியாக 8வது இடத்தில் இருந்து ஓப்பன் செய்ய வைத்தார். இதன் காரணமாக, பள்ளிப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக அறிமுகமான ஆட்டத்திலேயே சதம் அடித்து அசத்தினார். கடந்த 2007ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும், கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி டி20 போட்டியிலும் ரோஹித் சர்மா அறிமுகமானார். கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி ரித்திகா சஜ்தேவை ரோஹித் சர்மா திருமணம் செய்தார். இவர்களுக்கு தற்போது சமைரா சர்மா என்ற பெண் மகள் உள்ளார்

Read More

Rohit Sharma: ஆஸ்திரேலியா தொடரை மிஸ் செய்யப்போகும் ரோஹித்.. அடுத்த டெஸ்ட் கேப்டன் யார்?

Rohit Sharma Miss Australia Series: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 2 போட்டிகளில் ரோஹித் சர்மா வெளியேறினால், துலீப் டிராபியில் இந்திய பி அணியின் கேப்டனாக இருந்த அபிமன்யு ஈஸ்வரன் தொடக்க வீரராக களமிறங்கலாம். துலீப் டிராபியில் கேப்டனாக செயல்பட்டு 2 சதங்களை அடித்த அபிமன்யு ஈஸ்வரன், சமீபத்தில் நடைபெற்ற இரானி கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை அணிக்கு எதிராக ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்காக 191 ரன்கள் குவித்தார்.

Abhishek Nayar: ரோஹித் ஷர்மாவின் நண்பர்.. கம்பீரின் நம்பிக்கைக்குரியவர்.. யார் இந்த அபிஷேக் நாயர்..?

Abhishek Nayar Birthday: அபிஷேக் நாயருக்கு கிரிக்கெட்டில் நீண்ட ஆண்டு காலம் அனுபவம் உண்டு. ஹைதராபாத் அருகிலுள்ள செகந்திராபாத்தில் அபிஷேக் நாயர் பிறந்திருந்தாலும், முதல் தர போட்டியில் மும்பை அணிக்காக களமிறங்கினார். இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், வலது கையால் நடுத்த வேகத்தில் பந்தும்வீசுவார். அபிஷேக் நாயர் ரோஹித் சர்மாவை போன்று அதிபயங்கர சிக்ஸர் அடிக்கும் திறன் கொண்டவர்.

Ind vs Ban, 2nd Test: 52 ஓவர்களை மட்டுமே கையில் எடுத்த ரோஹித் படை.. வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா..!

Indian Cricket Team: வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. இந்திய அணியின் தொடக்க ஜோடியான ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஜோடி 3 ஓவர்களில் 51 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து, இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 50, 100, 150, 200 மற்றும் 250 ரன்கள் எடுத்த உலக சாதனையை படைத்தது. மேலும், ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது.

IPL 2025: ரோஹித் உட்பட இந்த வீரர்கள் வெளியேற்றமா..? ஐபிஎல்லில் நடக்கப்போகும் அதிரடி!

IPL teams: கடந்த ஏலத்தின்போது ஒரு அணியால் 4 வீரர்கள் மட்டுமே வைக்க முடியும் என்ற விதி இருந்த நிலையில், வருகின்ற ஏலத்தில் இருந்து 5 வீரர்கள் தக்க வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ரைட் டு மேட்ச் கார்டு உட்பட அதிகபட்சமாக ஆறு வீரர்களை தக்கவைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதிக்கும் என்று நம்பப்படுகிறது. எனினும், சில அணிகள் 8 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்குமாறு கோரி வருகின்றன. அப்படி 6 வீரர்கள் தக்கவைக்கப்பட்டால் மீதமுள்ள வீரர்கள் தானாகவே விடுவிக்கப்பட்டதாக கருதப்படுவார்கள்.

IND VS BAN 2nd Test: கான்பூர் டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவித்த பிசிசிஐ.. மீண்டும் மிரட்டுமா ரோஹித் படை..?

Team India Squad For Bangladesh 2nd Test: வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாண்டோ தலைமையிலான வங்கதேச அணியை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. முதல் டெஸ்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒருதலைப்பட்ச வெற்றியை கருத்தில் கொண்டு, பிசிசிஐ இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் ஒரு மாற்றமும் செய்யவில்லை.

Watch Video: அவுட் இல்லாத பந்துக்கு வெளியே சென்ற கோலி.. கோபத்தில் கத்திய ரோஹித் சர்மா..!

Virat Kohli: இன்றைய நாள் முடிய வெறும் 15 நிமிடங்களே இருந்த நிலையில் மெஹிதி ஹாசன் பந்தை விராட் கோலி சந்தித்தார். மெஹிதி ஹாசன் வீசிய 19.1 பந்தை அதிரடியாக பவுண்டரிக்கு விரட்டிய விராட் கோலி, அடுத்த பந்தே அவரது சுழலில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். அப்போது இந்திய அணியிடம் ஒன்றல்ல, மூன்று டிஆர்எஸ் இருந்தது. எதிரே இருந்த கில்லிடம் சிறிது ஆலோசனை நடத்திய விராட் கோலி டிஆர்எஸ் எதுவும் எடுக்காமல் நேரடியாக பெவிலியன் நோக்கி நடக்க தொடங்கினார்.

IPL 2025: ரோஹித்துக்கு அடிபோடும் பஞ்சாப் கிங்ஸ்.. மும்பை அணியின் முடிவு என்ன..?

Rohit Sharma: ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. 2020ம் ஆண்டுக்கு பிறகு ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. இதன் காரணமாக, கடந்த ஐபிஎல் 2024ம் ஆண்டு ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் கேப்டனாக அறிவித்தது. அப்போதிலிருந்து, ஒட்டுமொத்த அணியிலும் ஒற்றுமையின்றி இருந்ததாக கூறப்படுகிறது.