Sabarimala
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். இந்த கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து இருமுடி கட்டி வருகை தருவது வழக்கம். சபரிமலையில் கார்த்திகை மாதம் தொடங்கி மார்கழி மாதம் முடிய 48 நாட்கள் நடை திறக்கப்பட்டு நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஜோதி தரிசனம் ஆகியவை மிகவும் பிரபலம். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலைக்கு 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் செல்வதற்கு அனுமதி கிடையாது. இந்த வழக்கில் சட்டப்படி அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும் பக்தர்கள் காலம் காலமாக இருக்கும் நம்பிக்கையை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள். ஆண்டுதோறும் அதிகரித்து வரும் பக்தர்களின் எண்ணிக்கையால் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதில் சபரிமலை தேவசம் போர்டு மாநில அரசுடன் இணைந்து பல்வேறு விதமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். நாம் இந்த தொகுப்பில் சபரிமலை குறித்த செய்திகளை காணலாம்.