5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Sachin Tendulkar

Sachin Tendulkar

சச்சின் டெண்டுல்கர் இந்தியாவில் மட்டுமின்றி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். உலக கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த ஒரே பேட்ஸ்மேன். சச்சின் டெண்டுல்கர் 24 ஏப்ரல் 1973ம் தேதி சர்ஸ்வத் பிராமண குடும்பத்தில் பிறந்தார். சச்சினின் தந்தை ரமேஷ் டெண்டுல்கர் ஒரு மராத்தி கவிஞர் மற்றும் நாவலாசிரியர். இவரது தாயார் ரஜினி ஒரு காப்பீட்டு துறையில் பணியாற்றினார். சிறுவயதில் பந்துவீச்சில் ஆர்வம் கொண்ட சச்சின், அதன்பின் பேட்டிங்கை கையில் எடுத்தார். தனது 14 வயதில் பள்ளியில் நடந்த போட்டி ஒன்றில் 326 ரன்கள் அடித்து பிரபலமானார். கிரிக்கெட்டில் அறிமுகமாகி தனது முதல் சர்வதேச சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பியபோது மும்பை சர்வதேச விமான நிலையில் சச்சின், தனது வாழ்க்கை துணையான அஞ்சலியை பார்த்ததும் காதல் கொண்டார். அதன்பின், கடந்த 1995ம் ஆண்டு இருவரும் 5 வருட காதலுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சாரா என்ற பெண்ணும், அர்ஜூன் டெண்டுல்கர் என்ற மகனும் உள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி அனைத்து வடிவங்களிலும் சேர்த்து 657 போட்டிகளில் விளையாடி 34,000 ரன்களை கடந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் 34,000 ரன்களை கடந்த ஒரே பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே. இதை தொடர்ந்து, 16 நவம்பர் 2013 அன்று ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டிசம்பர் 2012 ல் சச்சின் தனது கடைசி ஒருநாள் போட்டியிலும், 2013ல் இருபது20 போட்டியிலும் விளையாடினார். நவம்பர் 16, 2013 அன்று வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான அவரது 200வது டெஸ்ட் போட்டியில் விளையாடி ஓய்வு பெற்றார்.

Read More