5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Samantha Ruth Prabhu

Samantha Ruth Prabhu

சென்னை பல்லாவரத்தில் கடந்த 1987-ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி பிறந்தார் நடிகை சமந்தா ரூத் பிரபு. சிறு வயது முதல் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக மாடலிங் துறையில் பயணித்த நடிகை சமந்தா , கவுதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டில் ரிலீஸான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பான ’யே மாயா சேசவே’ என்னும் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். தமிழில் மறக்க முடியாத காதல் படங்களில் ஒன்றாக நிலைபெற்றுவிட்ட ‘விண்ணைத்தாண்டி வருவாயா’வின் தெலுங்குப் பதிப்பான இது அங்கு மிகப் பெரிய வெற்றிபெற்றது. ஒரே நேரத்தில் இரட்டை மொழிப் படமாக உருவான இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் நாயகியாக நடித்த சமந்தா தமிழிலும் ஒரு சின்ன ஆனால் முக்கியமான வேடத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். இதன் மூலம் முதல் படத்திலேயே இரண்டு மாநிலங்களின் ரசிகர்கள் மனங்களில் இடம் பிடித்தார். அதன்பின் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டினார் நடிகை சமந்தா. தற்போது தென்னிந்திய சினிமா தாண்டி பான் இந்திய நடிகையாக வலம் வருகிறார்.

Read More