Selvaraghavan
தமிழ் சினிமா இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன் தான் இயக்குநர் செல்வராகவன். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர் செல்வராகவன் நடிகர் தனுஷ் என்ற மாபெரும் கலைஞனை சினிமாவுக்கு உருவாக்கி தந்தவர். செல்வராகவன் தனது அற்புதமான படைப்புகளால் தனக்கென தனியொரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் செல்வராகவன். இந்த படத்திற்கு பிறகு காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என தொடர்ந்து வித்யாசமான படங்களை இயக்கி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். இயக்குநராக ரசிகரகளின் மனதில் இடம் பிடித்த செல்வராகவன் நடிகராகவும் கலக்கினார். சாணிக்காயிதம், பகாசூரன், ராயன் என தொடர்ந்து படங்களில் நடித்துள்ளார். இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் என்ற பன்முக கலைஞனாக உருவெடுத்துள்ளார் செல்வராகவன். தொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில் வாழ்க்கை குறித்தும் உறவுகள் குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார். அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.