Share Market
பங்குச் சந்தை என்பது முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி விற்கும் இடமாக உள்ளது. அதாவது, ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியில் முதலீட்டாளர்கள் பங்குபெறுவதற்கும், அவர்களின் போர்ட்ஃபோலியோக்களை பல்வகைப்படுத்துவதற்கும், அதன் மூலம் வருமானம் பெறவும் ஓர் தளமாக செயல்படுகிறது. இதில் மும்பை பங்குச் சந்தை 1986ஆம் ஆண்டு ஜன.1ஆம் தேதி தொடங்கப்பட்டது. இது பி.எஸ்.இ சென்செக்ஸ் என குறிப்பிடப்படுகிறது. இதேபோல் தேசிய பங்குச் சந்தை 1992ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதன் குறியிட்டெண் என்.எஸ்.இ நிஃப்டி ஆகும். பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் காளை வளர்ச்சியையும், கரடி சரிவையும் குறிக்கும்.