SIP Systematic Investment Plan
என்றால் முறையான முதலீட்டு திட்டம் என்று அர்த்தம். இந்த எஸ்.ஐ.பி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான ஒரு சிறந்த வழியாக கருதப்படுகிறது. காரணம், இந்த எஸ்.ஐ.பிக்கள் நிதி சேமிப்பை ஊக்குவிக்கவும், எதிர்கால நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நிதி ஆதாயத்தை உருவாக்குவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த எஸ்.ஐ.பி முதலீட்டு திட்டத்திற்கு மொத்தம் இரண்டு விதமான கொள்கைகள் உள்ளன. முதல் கொள்கையின் படி, சந்தை உயரும் போது நீங்கள் குறைவான யூனிட்டுகளை பெறுவீர்கள். சந்தைகள் வீழ்ச்சியடையும்போது நீங்கள் அதிக யூனிட்டுகளை பெறுவீர்கள். இது உங்கள் நிதி அபாயத்தை குறைக்கும். எஸ்.ஐ.பி-ன் இரண்டாவது கொள்கை கூட்டு வளர்ச்சி ஆகும். இது, நீண்ட காலத்திற்கு ஒரு சிறிய தொகையை தவறாமல் சேமிக்க வழிவகை செய்கிறது. எஸ்.ஐ.பி, முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமான முதலீட்டு திட்டமாக உள்ளது. அதாவது, எஸ்.ஐ.பி-ஐ பொருத்தவரை ஒருவர் எப்போது வேண்டுமானாலும் முதலீட்டின் அளவை அதிகரிக்கலாம். அதே சமயம் எப்போது வேண்டுமானாலும் முதலீட்டின் அளவை குறைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.