5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Sivakarthikeyan

Sivakarthikeyan

சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் போட்டியளராக முதன் முதலில் தொலைக்காட்சி முன்பு தோன்றினார், பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளார், காமெடி நடிகர், பாடலாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என பல்வேறு பரிமாணங்களை தனக்காக உருவாக்க்கி கொண்டார். சின்னத்திரையில் வளர்ந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் அங்கிருந்து பெரிய திரைக்கும் வாய்ப்புகள் இவரை நோக்கி வந்தது. தமிழில் மெரினா படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த சிவகார்த்திகேயன் சினிமாவில் தொடர்ந்து பல மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு கிட்டத்தட்ட பன்னிரெண்டு ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்ற அந்தஸ்தை பெரும் அளவுக்கு உயர்ந்துள்ளார். தன் இயல்பான நடிப்பாலும், யதார்த்த பேச்சினாலும் மக்கள் மனதில் விரைவாக இடம்பிடித்தார் சிவகார்த்திகேயன். சவாலான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து படத்திற்கு படம் வித்தியாசம் காட்டுவது எஸ்.கேவின் தனிச்சிறப்பு

Read More

‘அமரன்’ படத்திலிருந்து வெளியானது ‘வெண்ணிலவு சாரல் நீ’ வீடியோ பாடல்!

Vennilavu Saaral - Video Song | மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவானது. தமிழில் மீண்டும் ஒரு தேசபக்தி படமாக உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 31-ம் தேதி வெளியானது. இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து ‘வெண்ணிலவு சாரல் நீ’ பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Tamil Cinema: தொடரும் வேட்டை.. ரூ.300 கோடிக்கும் மேல் வசூலை அள்ளிய தமிழ் படங்கள்!

Highest Collection Movies :தமிழ்த் திரைப்படங்கள் என்றாலே மக்களுக்குத் தனி கொண்டாட்டம்தான். அதிலும் முன்னணி கதாநாயகர்கள் ரஜினி, அஜித், விஜய் போன்ற நடிகர்களின் திரைப்படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்கு வரவேற்புகள் இருக்கும். முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இதுவரை ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ள திரைப்படங்களின் முழு லிஸ்ட் இதோ.!

Amaran Collection:விஜய்யை முந்தும் சிவகார்த்திகேயன்.. எப்படிதெரியுமா?

Amaran Collection :தமிழ் சினிமாவில் தற்போது முன்னிலை வகிக்கும் முக்கிய நடிகர்தான் சிவகார்த்திகேயன். சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான இவர் தனது விடாமுயற்சியால் தற்போது வெள்ளித் திரையிலும் கலக்கி வருகிறார். இவர் ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் அமரன் படம் வசூலை குவித்து வருகிறது.

அமரன் படம் 16 நாட்களில் வசூலித்தது எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்

Amaran Movie Collection: இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. தமிழில் மீண்டும் ஒரு தேசபக்தி படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

Amaran: அமரன் வெற்றி.. தாறுமாறாக உயர்ந்த சிவகார்த்திகேயன், சாய் பல்லவி சம்பளம்!

Sivakarthikeyan - Sai Pallavi : தமிழ்த் திரைப்படங்களில் கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளியை முன்னிட்டு மிகப் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் அமரன். இயக்குநர் ராஜ்குமார் பெரிய சாமியின் இயக்கத்தில் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் ராணுவ வாழ்க்கை, மற்றும் காதல் பற்றியும் அதிரடி கதைகளுடன் வெளியான இந்த திரைப்படம் வசூலிலும் சரி, விமர்சனங்களில் சரி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அமரன் திரைப்படமானது சிவகார்த்திகேயனுக்கு, நடிகை சாய் பல்லவிக்கு வெற்றியாக அமைந்த நிலையில் தற்போது அவர்களின் சம்பளத்தை உயர்த்தியதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

‘அமரன்’ படத்திலிருந்து வெளியானது ‘ஹே மின்னலே’ வீடியோ பாடல்!

Hey Minnale - Video Song | சோனி பிக்சர்ஸுடன் இணைந்து இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்  தயாரிக்கிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார்.  இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

விஜய், அஜித்துக்கு பிறகு சிவகார்த்திகேயன்.. தொடர்ந்து வசூல் சாதனை படைக்கும் ’அமரன்’ படம்!

Amaran Box Office Collection : தமிழ்த் திரைப்படங்களில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் அமரன். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் சோனி பிச்சர்ஸ் இணைந்து தயாரித்த திரைப்படமானது கடந்த அக்டோபர் 31ம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியது.

ஓடிடி வெளியீட்டில் தள்ளிப்போகும் ‘அமரன்’… காரணம் இதுதான்

Amaran OTT Release: நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்றுள்ளது. படம் வெளியான 28 நாட்களில் ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் படம் தற்போது திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் மேலும் ஒரு வாரம் கழித்து ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரூ. 200 கோடி வசூல் செய்து ’அமரன்’ படம் சாதனை – படக்குழு அறிவிப்பு

Amaran Movie Collection: நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 21-வது படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்திற்கு ‘அமரன்’ என்று பெயர் வைத்தனர். சோனி பிக்சர்ஸுடன் இணைந்து இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார்.

வசூலில் 200 கோடியை நெருங்கும் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படம்!

Amaran Box Office Collection: நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 21-வது படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்திற்கு ‘அமரன்’ என்று பெயர் வைத்தனர். சோனி பிக்சர்ஸுடன் இணைந்து இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார்.

7 நாட்களில் ’அமரன்’ செய்த வசூல்.. தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடிகளா?

Amaran Movie Collection : தமிழ் சினிமாவில் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் அமரன். இயக்குநர் ராஜ்குமார் பெரிய சாமியின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் வெளியாகி 7 நாட்களான நிலையில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 4க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியான இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

வசூல் வேட்டை நடத்தும் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ – இதுவரை வசூலித்தது எவ்வளவு தெரியுமா?

Amaran Box Office Collection: முன்னதாக இந்தப் படம் ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறு என்பதால் இது போர் சம்மந்தகாம இருக்கும் என்று கேள்விகள் எழுந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசியிருந்தார். அவர் கூறியதாவது இது மறைந்த ராணுவ வீரரான முகுந்தின் வாழ்க்கை வரலாறு. அவரின் குடும்பம் அவர் ராணுவத்தில் என்ன பணி செய்தார் என்பது குறித்து இந்தப் படம் இருக்கும் என்று படம் போர் சம்மந்தப்பட்டது இல்லை என்றும் விளக்கம் அளித்திருந்தார்.

பிரபலங்களின் பாராட்டு மழையில் சிவகார்த்திகேயனின் ’அமரன்’ படம்

Amaran Movie: மேஜர் முகுந்த் தனது 31-வது வயதில் நாட்டை எதிரிகளிடம் இருந்து காப்பதற்காக தனது இன்னுயிர் தந்து நாட்டின் மிக உயர்ந்த விருதான அசோக் சக்ரா விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் அந்த விருதை மறைந்த முகுந்த்தின் மனைவி இந்து முகுந்த் பெற்றுக்கொண்டார். இப்படம் தீபாவளி பண்டியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் உட்பட சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை படக்குழுவினருக்கு தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் இப்படி ஒரு சோக சம்பவமா?

Amaran: நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசிய விஷயங்கள் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது. அதாவது, “அமரன் படத்தில் நான் சிவகார்த்திகேயனாக தெரியவில்லை. முழுக்க முழுக்க மேஜர் முகுந்த் வரதராஜனாக தெரிந்ததாக பலரும் கூறினார்கள். இந்த நேரத்தில் அவரின் குடும்பத்தினருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முகுந்த் வரதராஜன் பற்றி நாம் செய்திகள் மூலமாக அறிந்து கொண்டோம்.

Amaran: முகுந்த் வரதராஜனுக்கு சாதி அடையாளம் தேவையில்லை.. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி!

Amaran Success Meet: மேஜர் முகுந்த் வரதராஜனின் அடையாளங்கள் படத்தில் மறைக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த அவரின் அடையாளங்கள் படத்தில் காட்சிப்படுத்தப்படாமல் இருப்பதாகவும், அதேசமயம் அவரது மனைவி இந்துவின் அடையாளங்கள் வெளிப்படையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்  குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.