Suryakumar yadav
சர்வதேச கிரிக்கெட்டில் 31வது வயதில் எத்தனை கிரிக்கெட் வீரர்கள் தங்களது ஓய்வை அறிவித்துள்ளனர். ஆனால், இந்திய அணிக்காக தாமதமாக அறிமுகமானாலும், இன்று சர்வதேச டி20 கிரிக்கெட்டை ஆட்சி செய்து வருகிறார். 2021ம் ஆண்டு தனது 31 வயதில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ், இன்று இந்திய டி20 அணியின் கேப்டனாக உள்ளது. மிஸ்டர் 360 டிகிரி என்ற அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ், ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடித்தார். அப்போது கிடைக்க வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட சூர்யகுமார் யாதவ், சரியாக 3 ஆண்டுக்குள் இந்திய டி20 அணியில் முழு நேர கேப்டனாக பதவி வகித்து வருகிறார். இந்தியாவுக்காக டி20யில் இரண்டாவது அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்த சூர்யகுமார் யாதவ், இந்தியாவுக்காக டி20யில் இரண்டாவது அதிவேக அரைசதம் அடித்துள்ளார். மார்ச் 14, 2021 அன்று, இங்கிலாந்துக்கு எதிரான டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சூர்யகுமார் யாதவுக்கு தனது முதல் போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த போட்டியில் களமிறங்கிய முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து டி20 சர்வதேசப் போட்டியில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சிக்ஸர் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். இதற்கு பிறகு டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் செய்தது ஏராளம்.