5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
T20 World Cup 2024

T20 World Cup 2024

2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 9வது ஆண்டாக நடக்கவுள்ளது. இது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியாகும். இந்த போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நடத்துகிறது. இந்த வருடத்துக்கான டி20 போட்டொ2024 ஜூன் 1 முதல் 29 வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த டி20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது. இந்த டி20 உலகக் கோப்பைக்கு, தகுதி பெறும் 20அணிகள் தலா ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாக பிரிக்கப்படும். ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இந்த கட்டத்தில், தகுதி பெறும் அணிகள் நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்படும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும், இதில் இரண்டு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி இருக்கும்.

Read More

India vs New Zealand: சொதப்பிய பேட்டிங்.. உலகக் கோப்பை முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வி!

Women's T20 World Cup 2024: நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் 20 ஓவரில் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்களை விட 19 ஓவர்களில் 102 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து இந்திய அணி ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், நியூசிலாந்து அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Mohammedsiraj: இந்திய வீரர் முகமது சிராஜிற்கு அரசுப்பணி, வீடு வழங்கப்படும் – தெலுங்கான முதல்வர் உறுதி

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் ரோகித் சர்மா தலைமைகளான இந்திய அணி 17 வருடத்திற்கு பிறகு உலக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. டி20 உலக கோப்பையை வென்ற அணி இடம் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிற்கு அரசு வேலை மற்றும் வீடு வழங்கப்படும் என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.

BCCI: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர்களுக்கு 125 கோடி பரிசு..? யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா?

உலக கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு வென்று சாதனைப்படைத்த இந்திய அணிக்கு 125 கோடி பரிசுத்தொகையை பிசிசிஐ அறிவித்தது. ஐசிசி அறிவித்த மொத்த பரிசுத்தொகையை காட்டிலும் 4 மடங்கு அதிகமாக வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் விமர்சங்கள் எழுந்தன. இதில் யார் யாருக்கு எவ்வளவு என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன் விவரங்களை காணலாம்.