Tamilisai Soundararajan
தமிழிசை சௌந்தரராஜன்
தமிழக அரசியலில் முக்கியமானவர் தமிழிசை சௌந்தரராஜன். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகள் இவர். இவர் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்தார். சிறுவயது முதலே தமிழ் மீது ஆர்வம் கொண்ட இவர், கல்லூரி காலத்திலேயே பட்டிமன்றங்கள், மேடை பேச்சுகள் போன்றவற்றில் கலந்து கொண்டார். பின்னர், அரசியலிலும் அடியெடுத்து வைத்த அவர், முதலில் 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் தோல்வி அடைந்தார். தொடர் தோல்வியை சந்தித்த அவர், 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தூக்குக்குடி தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அதன்பிறகு, 2019ஆம் ஆண்டு தெலங்கானாவில் முதல் பெண் ஆளுநராக பொறுப்பேற்றார். இதனை அடுத்து, 2021ஆம் ஆண்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் என கூடுதல் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அவர், தனது ஆளுநர், மற்றும் துணைநிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். 2024 மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்