5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Telangana

Telangana

தெலங்கானா மாநிலம் உருவான நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தெலங்கானா ஜூன் 2, 2014 அன்று அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் 28 வது மாநிலமாக மாறியது. இந்த நாள் பல ஆண்டுகால போராட்டம் மற்றும் தனி மாநில அடையாளத்திற்கான அபிலாஷைகளின் உச்சக்கட்டமாக வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா பகுதி வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் தனித்துவமான அடையாளத்தை கொண்டுள்ளது. இருப்பினும், பல ஆண்டுகளாக, இது ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. தெலங்கானாவைச் சேர்ந்த மக்கள் தங்கள் வளர்ச்சித் தேவைகள் மற்றும் கலாச்சாரத் தனித்தன்மைகள் போதுமான அளவு கவனிக்கப்படவில்லை என்று கருதினர். இதனால் தனி மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து போராட்டங்கள் நடத்தினர். இறுதியாக, 2014 இல், இந்திய நாடாளுமன்றம் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தை நிறைவேற்றி, தெலுங்கானா தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது. தெலுங்கானா மக்களுக்கு இது ஒரு பெருமைக்குரிய நாள் மற்றும் அவர்களின் அசைக்க முடியாத மனப்பான்மைக்கு சான்றாகும்

Read More
0

பெண் போலீஸ் ஆணவக் கொலை.. நடந்தது என்ன? பகீர் சம்பவம்!

Telangana constable honour killing: தெலங்கானாவில் பெண் போலீஸ் ஒருவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் பெண் போலீஸின் சகோதரன் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

Telangana: மாவட்ட ஆட்சியர், தாசில்தாருக்கு சரமாரி அடி.. தெலங்கானா மக்கள் ஆவேசம்!

Viral Video: புதிதாக மருந்து நிறுவனங்கள் அமைக்க மாநில அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விஹாரபாத் மாவட்டத்தில் உள்ள லகாசர்லா கிராமத்தில் இடம் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. மருந்து நிறுவனங்கள் அமைப்பதற்கான திட்டமிடல் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மறுப்பக்கம் மருந்து நிறுவனங்களுக்கு தேவையான நிலங்கள் கிராம மக்களிடமிருந்து கையகப்படுத்தும் பணியும் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Accident: சார்ஜர் மூலம் தாக்கிய மின்சாரம்.. தெலங்கானாவில் இளைஞர் உயிரிழப்பு!

மாலோத் அனில்  ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது அவரது கைது தெரியாமல் சார்ஜ் போடப்பட்டிருந்த சுவிட்ச் போர்டின் மீது பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாலோத் அனிலை  கொண்டு சென்றனர். ஆனால் அவரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Telangana: எமனாக அமைந்த பள்ளம்.. தெலங்கானா கார் விபத்தில் 7 பேர் பலி

கார் விபத்தில் துரதிஷ்டவசமாக காரில் பயணம் செய்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் பலத்த காயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் உடனடியாக காரில் இருந்தவர்களை மீட்க முயன்றனர். சம்பவம் தொடர்பாக மேடக் மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேடக் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.  

Andhra Pradesh Flood: வெள்ளத்தில் மிதக்கும் ஆந்திரா, தெலங்கானா.. 18 பேர் உயிரிழப்பு.. தவிக்கும் மக்கள்!

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் அருகே நேற்று அதிகாலை கரையை கடந்தது. இதையொட்டி பெய்த தொடர் கனமழை காரணமாக 10 பேர் உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலத்தில் பெய்த கனமழையால் 9 பர் உயிரிழந்தனர். ஆந்தராவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாநிலத்தின் சில பகுதியில் 27 செ.மீ வரை மழை பதிவானது.

Independence Day 2024: மெட்ராஸ் டூ தெலங்கானா.. மாநிலங்கள் உருவான வரலாறு.. சுதந்திரத்திற்கு பிறகு நடந்தது இதுதான்!

சுதந்திர தினம் 2024: இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 500க்கும் மேற்பட்ட மன்னர் மாகாணங்களில் ஜம்மு காஷ்மீர், ஹைதராபாத் உள்ளிட்ட மாகாணங்கள் இந்தியாவுடன் சேர்வதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், சில காலங்களுக்கு பிறகு இணைக்கப்பட்டது. தொடக்கத்தில் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மொழிவாரியாக உருவாக்கப்படவில்லை. அரசியல் மற்றும் வரலாற்று அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.

Telagana Election Exit Poll 2024: தெலங்கானாவில் கடும் போட்டி.. கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

Lok sabha Elections Exit Poll 2024 Results : டிவி டிவி 9 கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், தெலங்கானாவில் எந்த கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதை பார்ப்போம். காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 38.6 சதவீத வாக்குகளையும், பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 33 சதவீத வாக்குகளையும், சந்திரசேகர் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி 0.23 சதவீத வாக்குகளையும், ஏஐஎம்ஐஎம் கட்சி 2.0 சதவீத வாக்குகளையும் பெறும் கணிக்கப்பட்டுள்ளது.

“ஆர். ஆர். ஆர்”. தெலுங்கு படத்துடன் ஒப்பிட்டு, தெலங்கானா முதல்வரை விமர்சித்த பிரதமர் மோடி..!

"ஆர் ஆர் ஆர்" (RRR) என்ற பிரபலமான தெலுங்கு சினிமா படத்துடன் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை (ஆர் ஆர்) ஒப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி தாக்குதல் தொடுத்தார்.

அமித்ஷா போலி வீடியோ! தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு சம்மன்!

மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுவது போன்று எடிட் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்ததாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

போலீசாரை துரத்தியடித்த பழங்குடியின மக்கள் – தெலங்கானாவில் பரபரப்பு

  தெலங்கானாவில் பழங்குடியினர்களுக்கு ஏற்பட்ட நிலம் தொடர்பான தகராறில் சமரசம் செய்ய வந்த போலீசாரை துரத்தி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில், சத்துப்பள்ளி மண்டலம், புக்கபாடு கிராமத்தின் புறநகர் பகுதியான சந்திராயபாலம் கிராமத்தில் பழங்குடியினர்கள் இரு தரப்பினரிடையே தரிசு நிலம் தொடர்பாக இன்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சத்துப்பள்ளி போலீசார் பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க அங்கு வந்தனர். இரு தரப்பினரையும் ஒருங்கிணைத்து பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சி […]