Thol. Thirumavalavan
தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன் தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல் தலைவராவார். 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்த அங்கனூர் என்ற கிராமத்தில் பிறந்த அவர் 1988 ஆம் ஆண்டில் தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தலித் பாந்தர்ஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலில் முழு வீச்சில் ஈடுபட தொடங்கினார். 1990ல் அந்த இயக்கத்தின் தலைவராக பதவியேற்ற திருமாவளவன், அதனை கட்சியாக அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி உதயமானது. 1999 ஆம் ஆண்டு வரை விசிக தேர்தலில் போட்டியிடாமல் வந்தது. அதன்பிறகு போட்டியிட்ட அத்தனை தேர்தல்களிலும் திமுக, ஐக்கிய ஜனதா தளம், அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளில் ஏதேனும் ஒன்றுடன் இணைந்து தேர்தலை சந்தித்துள்ளது. தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் விசிகவில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக தொல்.திருமாவளவன் செயல்பட்டு வருகிறார்.