Tirunelveli
தமிழகத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது திருநெல்வேலி. பழமையும், பல பெருமைகளை கொண்ட நகரமாக திருநெல்வேலி இன்று வரை திகழ்கிறது. இந்தியாவில் நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டபோது முதலில் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று திருநெல்வேலி. மாவட்டத்தின் பொருளாதாரத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், ஏராளமான கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய இடமாக திருநெல்வேலி உள்ளது. வற்றாத ஜீவநதியான தாமிரபரணி திருநெல்வேலியின் முக்கிய அடையாளம். மேலும், சேர்வலாறு, மணிமுத்தாறு, ராமநதி உள்ளிட்ட நீர் ஆதாரமாக விளங்குகிறது. திருநெல்வேலி மாவட்டம் என்றாலே நினைவுக்கு வருவது இருட்டுக்கடை அல்வா தான். அந்தளவுக்கு அல்வா என்பது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. மேலும், நெல்லையப்பர் கோயில், அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அணை, களக்காடு மற்றும் முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்டவை முக்கிய சுற்றுலா தலமாகத் திகழ்கிறது. திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ராதாபுரம், அம்பாசமுத்திரம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் என 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.