Tirupati Temple
திருப்பதி கோயில்
இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தின் திருப்பதி மாவட்டத்தில் உள்ள திருமலை மலையில் அமைந்துள்ளது ஏழுமலையான் கோயில். உலக பிரசித்திப் பெற்ற இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த இடம் கலியுக வைகுண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் செயல்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இக்கோயில் தொண்டமான் மன்னரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் விஜயநகர பேரரசால் சீர்திருத்தப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. திருப்பதியில் லட்டு என்றால் மிகவும் பிரபலம். வைணவ சமயத்தின் 108 திவ்ய தேச கோயில்களில் 75 வது கோயிலாக திருப்பதி இடம் பெற்றுள்ளது. திருப்பதி சென்று வந்தால் திருப்பம் நிகழும் என்பது பக்தர்களிடையே நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதிகள், அன்னதானம், பேருந்து, ரயில் சேவை என பலவிதமான வசதிகளையும் மாநில அரசு வழங்கியுள்ளது. புகழ்பெற்ற திருப்பதி கோயில் தொடர்பான தகவல்களை பற்றி நாம் காணலாம்.