TNPSC
டி.என்.பி.எஸ்.சி என்பது தமிழக அரசுப் பணிக்கு தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு சார்ந்த அமைப்பாகும். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பெரும்பாலான பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. இதற்காக குரூப் வாரியாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. காலி பணியிட பதவிகளின் அடிப்படையில் குரூப் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஆனது போட்டித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 என குரூப் 8 தேர்வுகள் வரை நடத்தப்படுகிறது. இதற்கான ஒவ்வொரு தேர்வுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு உரிய கல்வித்தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு தகுதியுடையவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். இந்த போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் தேர்வின் நிலை பொறுத்து அரசு அலுவலக உதவியாளர் முதல் துணை ஆட்சியர் பதவி வரை பெறலாம்.