Tourism
இந்தியா பல மதங்கள், மொழிகள் மற்றும் மரபுகளுடன் கூடிய கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட நாடாக அறியப்படுகிறது. இத்தகைய இந்திய நிலத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பல இயற்கை சுற்றுலா தலங்கள் உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இயற்கையாக அமைந்த பல சுற்றுலா தலங்கள் இன்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு 1 கோடி சர்வதேச சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வந்ததாக கூறப்படுகிறது. உலக சுற்றுலா அமைப்பின் மதிப்பீட்டின்படி, கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு, இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் 2 கோடியை தாண்டுகிறது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார துறையில் சுற்றுலாத் துறையும் ஒன்றாகும். உள்நாட்டு பயணத்தை மேம்படுத்துவதற்காக சுற்று அமைச்சகத்தால் கடந்த 2023ம் ஆண்டு ‘விசிட் இந்தியா இயர்’ என அறிவிக்கப்பட்டது. உலக பொருளாதார மன்றத்தின் பயணம் மற்றும் சுற்றுலா வளர்ச்சி குறியீடு 2024ல் இந்தியாவின் தரவரிசை 39 ஆக உயர்ந்துள்ளது. இதனால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலா துறை 7% பங்களிப்பை தருகிறது