Trisha
நடிகை திரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாவார். 1983 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி சென்னையில் பிறந்த அவர் 1999 ஆம் ஆண்டு மிஸ் சேலம், மிஸ் சென்னை ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றார். 2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் சிறந்த சிரிப்புக்கான விருதை வென்றார். 1999 ஆம் ஆண்டு ஜோடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த திரிஷா , 2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்த ஒரே நடிகை என்ற பெருமைக்கு சொந்தக்காரராக திரிஷா உள்ளார். திரிஷா தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார். தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி நடிகைகளில் தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் ஒரே நடிகை திரிஷா.