5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
TVK Party

TVK Party

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி நடிகர் விஜயால் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் அரசியலுக்கு வருவார் என்ற பேச்சு பல நாட்களாக இருந்து வந்த நிலையில் பிப்ரவரி மாதம் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை டெல்லி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து அதனை தேர்தல் ஆணையமும் கட்சியாக அங்கீகரித்தது. அதற்கு பின் ஆகஸ்ட் 22 ஆம் தேதி கட்சியின் கொடியை வெளியிட்டார் விஜய். அதாவது சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் கொடிக்கு நடுவே இரண்டு யானைகளுடன் வாகை மலர் இருப்பது இடம்பெற்றிருந்தது. படிபடியாக காலடி எடுத்து வைக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. கட்சி தொடங்கும் போதே 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக கட்சியை பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது

Read More

சென்னை விரையும் விக்கிரவாண்டி விவசாயிகள்.. சூப்பர் விருந்தளிக்கும் விஜய்.. இதுதான் காரணமா?

TVK Vijay : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுககு அக்கட்சி தலைவர் இன்று விருந்து அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக கட்சி அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

”காழ்ப்புணர்வால் வன்மம்” திமுகவை விமர்சிக்கிறாரா திருமாவளவன்? அப்செட்டில் ஸ்டாலின்

திருமாவளவன் - விஜய் : திமுகவையும் விமர்சிக்கும் விஜய்யுடம் திருமாவளவன் இணக்கமாக இருந்தால் அது கூட்டணியை பலவீனப்படுத்தும் என திமுக தலைவர்கள் கருதுகின்றனர். எனவே, விஜய்யுடம் ஒரே மேடையில் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

TVK Party: “பொய்.. பொய்” அதிமுகவுடன் கூட்டணியா? தமிழக வெற்றிக் கழகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

த.வெ.க : அதிமுகவுடன் கூட்டணி என்ற தகவல் முற்றிலும் தவறு என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

TVK Party: 2026ல் விஜய் களமிறங்கும் சட்டமன்ற தொகுதி.. வெளியான அறிவிப்பால் மகிழ்ச்சி!

Thalapathy Vijay: அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய அவர் திமுகவை அரசியல் ரீதியாக எதிரி என மறைமுகமாக தெரிவித்தார். அதேபோல் பாஜகவை கொள்கை ரீதியாக எதிரி என விமர்சித்தார்.

விஜய் டிக் செய்ய உள்ள 120 பேர் யார்? த.வெ.க கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விரைவில் நியமனம்!

TVK Vijay : தமிழக வெற்றிக் கழக கட்சியில் விரையில் 120 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பணியில் அக்கட்சியின் தலைவர் விஜய் தீவிரமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரையில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

TVK Vijay: கருணாநிதி, ஜெயலலிதாவை விட பெரிய ஆளா? – விஜய்யை கிழித்தெடுத்த சீமான்!

Seeman vs Vijay: என்னை தலைவனாக தேர்வு செய்கிற கூட்டம், வாக்களிக்கும் மக்கள் யார் என கேட்டால் பொழுதுபோக்கு தளங்களில் தலைவனை தேடுபவன் அல்ல. போராட்ட களத்தில் தேடுகிறவர்கள். நான் பயந்து விட்டேன் என சொல்கிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும்போது கட்சி ஆரம்பித்தவன் நான். அவர்கள் இருவரை விட விஜய் பெரிய தலைவரா? என கேள்வியெழுப்பினார்.

“இது திட்டமிட்ட சூது… சனாதன சூழ்ச்சி” ஒரே மேடையில் திருமாவளவன், விஜய்? விசிக பதில்!

விஜய் - திருமாவளவன்: சென்னையில் வரும் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல். திருமாவளவனும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் ஒரே மேடையில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

TVK Party: “மாநாடு கூட்டிச் சென்றதற்கு பணம் தரவில்லை” – த.வெ.க. நிர்வாகி மீது வேன் ஓட்டுநர்கள் புகார்!

Tamilaga Vettri Kazhagam: தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஒரு மாதமாக அதற்கான பணிகள் நடைபெற்ற நிலையில் கிட்டதட்ட 8 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

ஒரே மேடையில் விஜய் உடன் பங்கேற்பா? திருமாவளவன் பரபரப்பு விளக்கம்!

திருமாவளவன்: வரும் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல். திருமாவளவனும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் ஒரே மேடையில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில், இதற்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

2026 தேர்தலுக்கு குறி.. திமுக, பாஜகவுக்கு எதிராக தீர்மானங்கள்.. விஜய் போடும் ஸ்கெட்ச்

நடிகர் விஜய் தலைமையில் சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் திமுக, பாஜகவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏற்கனவே, கட்சி முதல் மாநாட்டில் திமுக மற்றும் பாஜகவை கடுமையாக விஜய் சாடியிருந்த இருந்த நிலையில், தற்போது இருகட்சிகளுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

TVK Vijay: மொத்தம் 26 தீர்மானங்கள்.. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு.. த.வெ.க கூட்டத்தில் விஜய் அதிரடி!

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுமார் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நீட் எதிர்ப்பு முதல் மதுக்கடை, மின்சார கட்டணம் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

TVK: த.வெ.க மாநாட்டிற்கு பின் நடக்கும் முதல் ஆலோசனை கூட்டம்.. தலைமை அலுவலகத்திற்கு வந்த தலைவர் விஜய்..

இப்படி கட்சிப் பணிகள் படிப்படியாக நடந்து வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்ணன், தம்பி உறவு வேறு. கொள்கை வேறு. தாய் தந்தையராகவே இருந்தாலும் எங்களுடைய கொள்கைக்கு எதிராக இருந்தால் எதிரி எதிரி தான் என்று தெரிவித்துள்ளார்.

“விஜய்யை விமர்சிக்காதீங்க” இபிஎஸ் போட்ட ஆர்டர்.. 2026 தேர்தலில் பூகம்பம்தான் போலயே!

அதிமுக vs த.வெ.க: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சனம் செய்யக் கூடாது என்று அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கட்டளையிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதனால், வரும் 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மற்றும் த.வெ.க இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Seeman On TVK Party: “அண்ணன் என்ன.. தம்பி என்ன? எதிரி எதிரிதான்” மீண்டும் விஜய்யை கடுமையாக சாடிய சீமான்!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழக எனும் கட்சியை தொடங்கி, அக்கட்சியின் முதல் மாநாட்டை கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடத்தினார். இந்த மாநாட்டில் தமிழக இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், குறிக்கோள்கள் போன்றவற்றை அதிரடியாக அறிவித்தார்.

TVK Vijay: விஜய்க்கு ஆளக்கூடிய தகுதி வந்துவிட்டது.. இயக்குநர் பிரவீன் காந்தி புகழாரம்!

Director Praveen Gandhi: கடவுளை முன்னிறுத்தாமல் விஜய் செயல்பட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியடைய செய்த விஷயமாகும். அவர் தனது உரையில் பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில் இருந்து மட்டும் மாறுபடுகிறோம். கடவுளை வணங்குவது அவரவர் தனிப்பட்ட விஷயமாகும் என தெரிவித்தார். ஆனால் பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசியுள்ளார்.இந்து மதத்தில் மட்டும் தான் பெண்களை தெய்வமாக வணங்குகிறோம். நதிகளுக்கு பெண்கள் பெயர் சூட்டி அழகு பார்க்கிறோம்.