Union Budget
பாஜக தற்போது 3 வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் ஜூலை 22ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. யூனியன் பட்ஜெட் அல்லது மத்திய பட்ஜெட் என்பது மத்திய அரசு தயாரிக்கும் பட்ஜெட் ஆகும். இது ஒரு நிதியாண்டுக்கான நிதிக் கணக்கீடு. பட்ஜெட் என்பது அடுத்த நிதியாண்டிற்கான அரசின் வருவாய் மற்றும் செலவினங்களைக் கணக்கிடுவதாகும். ஒரு வருடம் முழுவதும் அரசாங்கத்திடம் இருந்து எவ்வளவு வருமானம் வரும்? அதே நேரத்தில் எவ்வளவு செலவாகும் என்று கணிக்கப்படுவது ஆகும். ஒரு நிதியாண்டு என்பது ஏப்ரல் 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரையிலான காலகட்டத்தைக் குறிக்கிறது. பட்ஜெட்டானது வருவாய் பட்ஜெட் மற்றும் மூலதன பட்ஜெட் என 2 வகைப்படுத்தப்பட்டுள்ளது. வருவாய் பட்ஜெட் என்பது வரவு – செலவுத் திட்டம், வரி மற்றும் வரி அல்லாத மூலங்களிலிருந்து வரும் வருவாய்கள் மற்றும் அந்த வருவாய்கள் எவ்வாறு செலவிடப்படும் என்பதைக் கணக்கிடுவது ஆகும். மூலதன வரவுசெலவு பட்ஜெட் என்பது அரசாங்கம் வாங்கும் பொதுக் கடன் குறித்தும் அந்தக் கடன் எங்கு பயன்படுத்தப்படும் என்பதையும் குறிப்பிடுவது ஆகும்.