5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி
Uric Acid

Uric Acid

யூரிக் அமிலம்

நம் உடலில் உள்ள யூரிக் அமிலம் என்பது ஒரு வகையான அழுக்காகும். இது இரத்தத்தில் கலந்து உடலின் பல இடங்களில் வலியை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் இந்த வலி மிகவும் தாங்க முடியாத வலியாகவும் உருவெடுக்கிறது. பியூரின் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும்போது இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்க செய்கிறது. பொதுவாக நமது சிறுநீரகங்கள் வடிகட்டி, சிறுநீர் மூலம் உடலில் இருந்து யூரிக் அமிலத்தை வெளியேற்றும். ஆனால், பியூரின் அளவு அதிகரிக்க தொடங்கும்போது, சிறுநீரகங்கள் சரியாக செயல்பட முடியாமல் போகிறது. இதன் காரணமாக யூரிக் அமிலம் இரத்தத்தில் கலக்க தொடங்குகிறது. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஆண்களின் உடலில் யூரிக் அமிலம் 4 முதல் 6.5 mg/dL என்ற அளவிலும், பெண்களின் யூரிக் அமிலம் 3.5 முதல் 6 mg/dL என்ற அளவிலும் இருக்க வேண்டும். ஒருவரின் யூரிக் அமிலத்தின் அளவு இயல்பை விட அதிகமாக இருந்தால், அதை உடனடியாக குறைப்பது மிக முக்கியம். மேலும், யூரிக் அமிலம் நம் உடலில் அதிகரிக்கும்போது செரிமான அமைப்பும் பாதிக்கப்படும். இப்படியே இதை கவனிக்காமல் விட்டால், சிறுநீரகம் மற்றும் இதய நோய் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

Read More

Uric Acid Control: உடலில் பல பிரச்சனை தரும் யூரிக் அமிலம்.. இதை எப்படி கட்டுப்படுத்தலாம்…?

Uric Acid: யூரிக் அமிலம் உடலில் சிறுநீரக கற்கள், கீல்வாதம், மூட்டு வலி போன்ற வலி நிறைந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும், இந்த யூரிக் அமிலம் இதய நோய்கள், சர்க்கரை நோய் மற்றும் கொழுப்பு கல்லீரல் போன்ற நோய்கள் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.

Salt : மிக குறைந்த அளவில் உப்பை எடுத்து கொள்கிறீர்களா..? இதுவும் உடலுக்கு பிரச்சனைதான்!

Health Tips: உப்பில் சோடியம், பொட்டாசியம் மற்றும் குளோரைடு போன்ற எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. இவரை உங்கள் உடலை ஈரப்பதமாக வைக்க உதவி செய்கிறது. இதை உட்கொள்வது நரம்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தவும், தசை சுருக்கத்தை சரி செய்யவும் உதவும். நீங்கள் அதிகமாக உழைக்கும்போது வியர்வை வெளியேறும். உடற்பயிற்சி செய்த பின் உப்பு கலந்த நீர் அருந்தினால், இது புத்துணர்ச்சியையும், ஆற்றலையும் தரும்.

Uric Acid: யூரிக் அமிலம் என்றால் என்ன..? இது ஏன் உடலுக்கு தீங்கு..? முழு விவரம் இங்கே!

Health Tips: பியூரின் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும்போது இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்க செய்கிறது. பொதுவாக நமது சிறுநீரகங்கள் வடிகட்டி, சிறுநீர் மூலம் உடலில் இருந்து யூரிக் அமிலத்தை வெளியேற்றும். ஆனால், பியூரின் அளவு அதிகரிக்க தொடங்கும்போது, சிறுநீரகங்கள் சரியாக செயல்பட முடியாமல் போகிறது. இதன் காரணமாக யூரிக் அமிலம் இரத்தத்தில் கலக்க தொடங்குகிறது.