Viduthalai Chiruthaigal Katchi
விடுதலை சிறுத்தை கட்சி தமிழ்நாட்டின் பிரதான கட்சியாகும். தமிழ்நாட்டின் தற்போதைய ஆளும் கட்சியாப திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணியில் உள்ளது. 1972 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி இயக்கத்தின் தமிழக தலைவர் மலைச்சாமி படுகொலை செய்யப்பட்ட பின், திருமாவளவன் ஒருமித்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சி என தமிழில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முதல் முறையாக விசிக கட்சிக்கு 1999 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜி.கே மூப்பனார் தலைமையிலான தாமக கூட்டணியில் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து தேர்தல் களத்தை சந்தித்த விசிக, தற்போது தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதேபோல் 2024 நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இரண்டிலும் வெற்றி வாகை சூடியது. தொடர்ந்து விசிக தரப்பில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.