Actor Thalapathy Vijay
1992ஆம் ஆண்டு நாளை தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் விஜய்யை முதன்முதலாக நடிகராக அறிமுகப்படுத்தியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்த படத்தில் விஜய்க்கு கை கொடுக்கவில்லை என்றால், செந்தூரப்பாண்டி திரைப்படம் எதிர்பார்த்தப்படி விஜய்யை பிரபலமாக்கியது. 1994ஆம் ஆண்டு தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ரசிகன் படத்தில் தான் விஜய்யின் பெயருக்கு முன்னாள் இளைய தளபதி பட்டம் முதன்முதலில் கிடைத்தது. விஜய்யின் சினிமா கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த முதல் படம் பூவே உனக்காக. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, 42 வயது வரை இளைய தளபதி என அழைக்கப்பட்ட நடிகர் விஜய் 2017ஆம் ஆண்டில் இயக்குநர் அட்லீ படம், இவரது அடைமொழியை தளபதி என மாற்றப்பட்டது. மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தான் முதன்முலாக தளபதி என அழைக்கப்பட்டது. மெர்சல் படத்தில் நேரடியாக அரசியல் பேசிய விஜய் அதன்பிறகு வெளியான தெறி, சர்கார் போன்ற படங்களிலும் பல அரசியல் கருத்துகளை பேசி ரசிர்களை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து அரசியல் விஷயங்களை படத்தில் கையில் எடுத்த விஜய், தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியையும் தொடங்கியுள்ளார். 2026 தேர்தலில் அவர் முழு மூச்சாக அரசியலில் களம் இறங்கவும் போகிறார்.