Virat Kohli
லகின் தலைசிறந்த வீரர்களில் தற்போது விராட் கோலியும் ஒருவர். விராட் கோலி 1988ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி டெல்லியில் பிறந்தார். விராட் கோலியின் தந்தை பிரேம் கோலி ஒரு குற்றவியல் வழக்கறிஞர் மற்றும் தாயார் சரோஜ் கோலி ஒரு இல்லத்தரசி ஆவார். விராட் கோலிக்கு விகாஸ் கோலி என்ற அண்ணனும், பாவனா கோலி என்ற அக்காவும் உள்ளனர். விராட் தனது ஆரம்ப கல்வியை டெல்லியில் உள்ள விஷால் பார்தி பப்ளிக் பள்ளியில் பயின்றார். விராட் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டு, அதற்கான தன்னை வளர்த்து கொண்டார். விராட் கோலியின் தனிப்பட்ட திறமையால் மிக விரைவில் டெல்லியின் 15 வயதுக்குட்பட்ட மற்றும் 17 வயதுக்குட்பட்ட அணிகளில் இடம்பிடித்தார். கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்டு 18ம் தேதி விராட் கோலி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இதன்பிறகு, 2010ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் போட்டியிலும், ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 போட்டியிலும் அறிமுகம் ஆனார். விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் அதுவேகமாக 8,000, 9,000, 10,000, 11,000 மற்றும் 12,000 ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், சமீபத்தில் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 27,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனை படைத்து, சச்சின் சாதனையை முறியடித்தார்.