Weather alert
எந்த ஒரு இடமும் வருடம் முழுவதும் ஒரே மாதிரியான தட்பவெப்ப நிலையில் இருப்பதில்லை. வானிலை என்பது மாறிக்கொண்டே இருக்கும் ஒன்று. வானிலை என்பது வளிமண்டலத்தில் நடக்கும் மாற்றத்தின் நிலையே ஆகும். எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான வானிலையும் நிலவுவதில்லை. அந்த இடத்தின் தன்மை, தட்பவெப்ப நிலை, அந்த இடம் அமைந்துள்ள பூலோக அமைப்பு உள்ளிட்ட பல காரணங்களை வைத்து அந்த இடத்தின் வானிலை மாறுகிறது. உதாரணமாக தமிழ்நாடும், ஜம்மு காஷ்மீரும் ஒரே மாதிரியான வானிலை அமைப்பை கொண்டிருப்பதில்லை. ஆனால் அந்த இடங்களில் அதன் அமைப்புக்கு ஏற்ப வானிலை மாற்றம் என்பது இருக்கிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை மார்ச் முதல் ஜூன் வரையில் வெயில்காலம் இருக்கிறது.பின்னர் மழைக்காலம் தொடங்கி பனிக்காலம் வருகிறது. ஆனால் இப்போதெல்லாம் புவியியல் மாற்றம் காரணமாக வெயில் காலங்களில் கடும் மழை பெய்வதும் , மழைக்காலங்களில் கடுமையான பனிப்பொழுதும் இருந்து வருகிறது. இப்படியான வானிலை மாற்றங்கள் குறித்தும், வானிலை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தொடர்பாகவும் இங்கு தொடர்ந்து பதிவிடப்படுகிறது.