Weight Loss
நவீன வாழ்க்கை முறையில் பெரும்பாலான மக்கள் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக பெரும்பாலான மக்கள் உடற்பயிற்சி, ஜிம், யோகா, நடைபயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொள்கின்றனர். உடல் எடையை குறைப்பது அழகாக இருப்பதற்கு மட்டுமல்ல, இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமானது. உடல் எடை அதிகமாக இருந்தால், உடல் பருமனால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் (பிபி), இதய நோய் போன்ற பிரச்சனைகளை சந்திக்கலாம். எனவே உடல் எடையை குறைக்க நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன் தினமும் 30 நிமிட நடைபயிற்சி அல்லது ஜாகிங், லேசான உடற்பயிற்சிகளும் அவசியம். இருப்பினும், உடல் எடையை குறைக்க அதிகப்படியான மருந்துகளை உட்கொள்ள வேண்டாம். இது சில சமயங்களில் உடலுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே, ஆரோக்கியமான முறையில் சுகாதார நிபுணர்களின் அறிவுரைகளை பின்பற்றி உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக இருங்கள்