Year Ender 2024
இந்த வருடம் முடிந்து புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்க போகிறோம். ஒவ்வொரு ஆண்டின் தொடக்கமான ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை உலகம் முழுவதும் பல நிகழ்வுகள் நடந்துள்ளது. இந்தியாவில் பல முக்கிய மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற்று அதில் யாருக்கு வெற்றி, யாருக்கு தோல்வி என்றெல்லாம் பார்த்தோம். அந்த வகையில், இந்த ஆண்டு முடிவதற்குள், இவற்றை எல்லாம் திரும்பி பார்க்கும் விதமாக மீண்டும் ஒருமுறை உங்களுக்கு சொல்ல போகிறோம்.
மக்களிடம் அதிக ஈர்ப்பை பெறும் சினிமா, கிரிக்கெட், ஆட்டோமொபைல் தொடர்பான விஷயங்களும் இங்கு இடம்பெறவுள்ளன. இந்த டாபிக் கீழ் இந்த ஆண்டு எந்த படம் அதிக வசூல் செய்தது..? எந்த படம் ஓடிடியில் அதிக எதிர்பார்ப்பை கொடுத்தது..? கிரிக்கெட்டில் எந்த அணி அதிக வெற்றியை பெற்றது..? பங்கு சந்தையின் ஏற்ற இறக்கம், புதிய அரசியல் கட்சிகளின் அறிமுகம், எந்தெந்த புதிய போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன, எந்தெந்த மாடல் வாகனங்கள் களமிறங்கின உள்ளிட்ட முழு விவரங்களையும் உங்கள் கண் முன்னால் மீண்டும் மறுபார்வையாக தர போகிறோம்