5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Personality Test : இளவேனில் முதல் குளிர் காலம் வரை.. உங்களுக்கு பிடித்த காலமே உங்கள் பண்புகளை சொல்லும்!

4 Seasons | காலநிலையை பொருத்தவரை 4 முக்கிய காலநிலைகள் கூறப்படுகின்றன. அதாவது, இளவேனில் காலம், கோடை காலம், இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலம். ஒரு நபர் இந்த காலங்களில் எந்த காலத்தின் மீது அதிக ஈர்ப்புக் கொண்டிருக்கிறாரோ அதுவே அந்த நபரின் பண்புகளை சொல்லும் என கூறப்படுகிறது. 

Personality Test : இளவேனில் முதல் குளிர் காலம் வரை.. உங்களுக்கு பிடித்த காலமே உங்கள் பண்புகளை சொல்லும்!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 08 Nov 2024 15:47 PM

மனிதர்களின் உளவியல் மிகவும் நுட்பமானது. ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதமான உளவியல் பண்புகளை கொண்டிருப்பர். ஒருவரின் உளவியல் படியே அவரின் எண்ணங்களும், செயலும் இருக்கும். உளவியல் ஒருவரின் தனிப்பட்ட உள்ளார்ந்த உணர்வுகளுடன் தொடர்புடையது என்பதால் அதை மற்றொருவரால் அவ்வளவு எளிதாக உணர்ந்துக்கொள்ள முடியாது. ஒரு நபர் என்ன நினைக்கிறார், அவர் ஏன் அப்படி செயலாற்றுகிறார் என பலருக்கும் புரியாது. காரணம் அவ்வளவு சிக்கல் வாய்ந்தது இந்த உளவியல். ஆனால், ஒருவரின் விருப்பு, வெறுப்புகளை வைத்தே அந்த மனிதரின் உளவியல் மற்றும் பண்புகளை கண்டறிய முடியும் என்றால் நம்ப முடிகிறதா. அப்படிப்பட்ட சுவாரஸ்யமான விஷயம் தான் இது. ஒருவருக்கு எந்த காலநிலை பிடிக்கும் என்பதை வைத்தே அவர் எத்தகைய பண்புகளை கொண்டவர் என்பதை எளிதாக கண்டுபிடித்துவிடலாம் என கூறப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Optical Illusion : உங்களுக்கு முதலில் தெரிந்தது எது?.. முதியவரா அல்லது குடையா.. உங்களது பண்புகள் இவைதான்!

காலநிலையை பொருத்தவரை 4 முக்கிய காலநிலைகள் கூறப்படுகின்றன. அதாவது, இளவேனில் காலம், கோடை காலம், இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலம். ஒரு நபர் இந்த காலங்களில் எந்த காலத்தின் மீது அதிக ஈர்ப்புக் கொண்டிருக்கிறாரோ அதுவே அந்த நபரின் பண்புகளை சொல்லும் என கூறப்படுகிறது.

கோடை காலம்

கோடை காலத்தை விரும்பும் நபர்கள் வாழ்க்கையை விரும்பி வாழும் மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள். எப்போதும் ஆர்வத்துடனும், உர்சாகத்துடனும் இருப்பார்கள். இந்த காலத்தை விரும்பும் நபர்கள் தான் மட்டுமன்றி, தன்னை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். இவர்கள் பிறருடன் பேசி பழகுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களது தன்னப்பிக்கையால் எத்தகைய அசாதாரன சூழலாக இருந்தாலும் அதை மிக எளிதாக கையாலும் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.

இதையும் படிங்க : Personality Test : உங்கள் விழிகளின் நிறத்தை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என சொல்லிவிடலாம்!

குளிர் காலம்

குளிர் காலத்தை விரும்பும் நபர்கள் அதிகம் சிந்திக்கும் ஆற்றலை கொண்டிருப்பர். அவர்கள் தனிமையில் இருப்பதை அதிகமாக விரும்புவார்கள். குளிர் காலத்தை விரும்பும் நபர்கள் மிகவும் அமைதியான குணாதிசயத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். குறிப்பாக எழுதுவது, படிப்பது, ஓவியம் வரைவது உள்ளிட்ட செயல்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட நபர்களாக இருப்பார்கள். குளிர் காலத்தை நேசிக்கும் நபர்கள், நண்பர்களுடன் மிகவும் எளிதாக பழகும் பண்புகளை கொண்டிருப்பர். அதுமட்டுமன்றி, நண்பர்களுக்கு அவ்வப்போது வாழ்க்கைக்கான வழிகாட்டுதலையும் வழங்குவர்.

இளவேனில் காலம்

இளவேனில் காலத்தை விரும்பும் நபர்கள் வளர்ச்சிக்காக உழைக்கும் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த காலத்தை விரும்பும் நபர்கள் புதிய மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மன பக்குவம் உடையவர்களாக இருப்பார்கள். இளவேனில் காலத்தை விரும்பும் நபர்கள் திறந்த உள்ளம், விரிவான பார்வை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்களை தாங்களே உற்சாகப்படுத்திக் கொள்வது மட்டுமன்றி, தன்னை சுற்றி இருப்பவர்களையும் மிகவும் உற்சாகமாக வைத்திருப்பார்கள். அவர்கள் தங்கள் நட்பு வட்டாரத்தில் அமைதியை உருவாக்கும் நபர்களாக இருப்பார்கள்.

இதையும் படிங்க : Viral Video : அப்பா என் ஐஸ்கிரீமை சாப்பிட்டு விட்டார்.. கியூட்டாக கம்ப்ளெயிண்ட் செய்யும் சிறுமி.. வைரலாகும் வீடியோ!

இளையுதிர் காலம்

இளையுதிர் காலத்தை விரும்பும் நபர்கள், சிறந்த நல் எண்ணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். சிறிய விஷயங்களுக்கு கூட பிறரை பாராட்டும் குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். இயற்கை அழகை ரசிப்பது, பிறருடன் நட்பாக பழகுவது இவர்களுக்கு மிகவும் பிடித்த செயலாக இருக்கும். மிகவும் எளிமையாகவும், நட்பாகும் குணங்கள் கொண்ட இவர்கள் சில சமையங்களில் தனிமையில் இருக்க விரும்புவர். அதே சமயம் நண்பர்களுடனான கொண்டாட்டங்களிலும் பங்கேற்பதை விரும்புவர்.

Latest News