5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video : பெண் மீது விழுந்த தண்ணீர் தொட்டி.. அடுத்து நடந்தது என்ன.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

CCTV | இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவுக்கு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோ குறித்து பதிவிட்டுள்ள ஒருவர், அது பிளாஸ்டிக் தொட்டி என்பதால் அந்த பெண் எந்தவித சேதமின்றி பாதுகாப்பாக உள்ளார். இதுவே வேறு ஏதேனும் உறுதியான பொருளாக இருந்தால் அவரது நிலமை என்னாவாகி இருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Viral Video : பெண் மீது விழுந்த தண்ணீர் தொட்டி.. அடுத்து நடந்தது என்ன.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோ
vinalin
Vinalin Sweety | Published: 15 Oct 2024 15:49 PM

வீட்டு வாசலில் நடந்துக்கொண்டிருந்த பெண் மீது பெரிய அளவிலான தண்ணீர் தொட்டி விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோ வேகமாக வைரலானதை தொடர்ந்து, பலரும் அந்த வீடியோவின் கீழ் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த பெண் பாதுகாப்பாக உள்ளாரா என்றும் பலரும் அக்கரையுடன் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக தகவல்களை பார்க்கலாம்.

இணையத்தில் வைரலாகும் பெண்ணின் சிசிடிவி

கடந்த சில நாட்களாக இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தேதி குறிப்பிடப்படாததால் அது எந்த தேதியில் நடந்தது, எங்கு நடந்தது என்பது குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை. இந்த நிலையில், இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் அந்த வீடியோவில் பெண் ஒருவர், எதிர் வீட்டில் இருப்பபர்களிடம் பேசிவிட்டு தனது வீட்டிற்குள் செல்ல சாலையில் நடந்து செல்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது ஒரு பெரிய பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி வந்து விழுகிறது. இதனை கண்டு பயந்துப்போன அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று அந்த தண்ணீர் தொட்டியை தூக்க, அதற்குள் அந்த பெண் அப்படியே நின்றுக்கொண்டிருக்கிறார். அந்த பெண்ணுக்கு பலத்த காயம் எதுவும் ஏற்படவில்லை என்பது இதன் மூலம்  தெரியவருகிறது. தற்போது இந்த வீடியோ தான் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video: வேற லெவல்… அனைத்து வேலைக்கும் ரோபோ வந்தாச்சு.. வைரல் வீடியோ!

வைரல் சிசிடிவி குறித்து நெட்டிசன்கள் கருத்து

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவுக்கு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோ குறித்து பதிவிட்டுள்ள ஒருவர், அது பிளாஸ்டிக் தொட்டி என்பதால் அந்த பெண் எந்தவித சேதமின்றி பாதுகாப்பாக உள்ளார். இதுவே வேறு ஏதேனும் உறுதியான பொருளாக இருந்தால் அவரது நிலமை என்னாவாகி இருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ள மற்றொரு நபர், வாகனங்களில் செல்வது மட்டுமன்றி சாலையில் நடந்து செல்வதற்கே இப்போதெல்லாம் அச்சமாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார். அதுமட்டுமன்றி சிலர் வேடிக்கையாகவும் அந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Ratan Tata : ரத்தன் டாடாவின் உடலை விட்டு வர மறுத்த செல்லப்பிராணி “Goa”.. இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!

இணையத்தில் மிக வேகமாக வைரலாகும் வீடியோக்கள்

சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது எளிதாக இணையத்தில் வைரலாகி விடுகிறது. முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் அசாத்தியமான அல்லது முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அது தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே தகவல சென்று சேர்ந்து விடுகிறது. இவ்வாறு செய்தி விரைவாக சென்று சேர்வது பல வகைகளில் நன்மையாக இருக்கிறது. இவ்வாறு விரைவாக தகவல் பரிமாறப்படுவதன் மூலம் குற்ற சம்பவங்கள் எளிதான கண்டறியப்பட்டு அதற்கு விரைவில் தண்டனைகளும் வழங்கபடுவது குறிப்பிடத்தக்கது.

Latest News