5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video : சிக்னல் செய்து வழிவிட சொன்ன யானை.. இணையத்தை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கிய வீடியோ!

Elephant | யானைகள் செய்யும் அசாத்திய செயல்களை குறித்து அவ்வப்போது சில வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், தான் செல்லும் வழியில் நின்றுக்கொண்டிருந்த நபர் ஒருவரை யானை வழிவிட கூறும் வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Viral Video : சிக்னல் செய்து வழிவிட சொன்ன யானை.. இணையத்தை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கிய வீடியோ!
யானையின் வைரல் வீடியோ
vinalin
Vinalin Sweety | Published: 17 Dec 2024 22:02 PM

யானைகள் மிகவும் வலிமை வாய்ந்த விலங்கு மட்டுமன்றி அன்பும், அறிவுத்திறனும் மிக்கவை என கூறப்படுகிறது. அவை, மனிதர்களை போலவே, மிகவும் உணர்ச்சிகரமானவை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், யானைகள் உண்மையாகவே அறிவுத்திறன் மிக்கவை என்பதை உணர்த்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், யானை ஒன்று தான் செல்லும் வழியில் நின்றுக்கொண்டிருந்த நபரை விலகி செல்ல வைக்க காலால் தரையை தட்டும் வீடியோ தான் அது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த சிசிடிவி காட்சியில், ஒரு நபர் சாலையின் நடுவே நின்றுக்கொண்டு எதையோ பார்க்கிறார். அந்த நேரம் அந்த வழியாக ஒரு யானை வருகிறது. அப்போது, தான் செல்லும் வழியில் அந்த நபர் இருப்பதை கண்ட யானை, அவரை விலகி செல்ல வைக்கும் வகையில் தரையை காலால் தட்டி புழுதியை கிளப்புகிறது. சத்தம் கேட்டு திரும்பி பார்க்கும் அந்த நபர், தனக்கு பின்னால் பெரிய யானை ஒன்று நின்றுக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். யானை தன்னை தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில், அந்த இடத்தில் இருந்து ஓடுகிறார். ஆனால், யானையோ அந்த நபரை எதுவும் செய்யாமல் தன் பாதையில் நடந்துச் செல்கிறது. அதை அந்த நபர் அங்கிருக்கும் ஆலமரத்தின் கீழ் நின்றுக்கொண்டு கவனிக்கிறார். இவை அனைத்தும் அந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Viral Video : கை விலங்குடன் பைக் ஓட்டிய கைதி.. ஜாலியாக பின்னால் அமர்ந்து சென்ற போலீஸ்.. வைரல் வீடியோ!

வைரல் வீடியோவுக்கு இணையத்தில் குவியும் கருத்துக்கள்

யானையின் இந்த வியக்கத்தக்க வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். யானைகள் மிகவும் அறிவுத் திறன் வாய்ந்தவை என்று கேள்வி பட்டிருக்கிறேன், ஆனால் இவ்வளவு அறிவாளிகள் என்பதை இன்றுதான் பார்க்கிறேன் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். எந்த ஒரு உயிரினமும் காரணம் இல்லாமல் யாரையும் காயப்படுத்துவதில்லை, தங்களின் தற்காப்பிற்காகவே அவை தாக்குதல் நடத்துகின்றன என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். தனக்கான பாதையில் பயணிப்பது மட்டுமே அதன் இலக்காக உள்ளது, அதற்கு தடையாக இருந்த நபரை அந்த யானை எவ்வளவு பொருமையாக கையாளுகிறது என்று ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News