5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Building Collapsed : நொடி பொழுதில் இடிந்து விழுந்து தரைமட்டமான கட்டடம்.. அதிர்சியூட்டும் சிசிடிவி காட்சி!

Building Collapsed | மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஒரு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிசிடிவி காட்சி அருகில் இருந்த கடையின் சிசிடிவி காட்சி. அதில் ஒரு பெரிய கட்டடம் பயங்கர சத்தத்துடன் நொடி பொழுதில் இடிந்து விழுந்து தரைமட்டமாகும் காட்சி பதிவாகியுள்ளது.

Building Collapsed : நொடி பொழுதில் இடிந்து விழுந்து தரைமட்டமான கட்டடம்.. அதிர்சியூட்டும் சிசிடிவி காட்சி!
கட்டட விபத்து
vinalin
Vinalin Sweety | Updated On: 20 Jul 2024 16:56 PM

கட்டட விபத்து : மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அங்கு பெய்து வரும் தொடர் மழை காரணமாக கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில் 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த விபத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நொடி பொழுதில் இடிந்து தரைமட்டமான கட்டடம் – அதிர்சியூட்டும் சிசிடிவி காட்சி

மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஒரு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிசிடிவி காட்சி அருகில் இருந்த கடையின் சிசிடிவி காட்சி. அதில் ஒரு பெரிய கட்டடம் பயங்கர சத்தத்துடன் நொடி பொழுதில் இடிந்து விழுந்து தரைமட்டமாகும் காட்சி பதிவாகியுள்ளது.

இடைவிடாது கொட்டித் தீர்க்கும் கனமழை – ஸ்தம்பித்த மும்பை

மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அங்கு நேற்று பெய்த மழையின் காரணமாக நகரமே ஸ்தம்பித்துள்ளது. இடைவிடாது பெய்த மழையின் காரணமாக பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில்வே சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மத்திய ரயில்கள் புரப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மற்ற ரயில்கள் எந்த சிக்கலும் இல்லாமல் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு மேலும் மிதமான முதல் கணமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மும்பையில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்கள் மற்றும் வீடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Latest News