5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video : குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் ராட்சத முதலைகள்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

Gujarat Rain | குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மாநிலத்தின் பல பகுதிகளுக்கு ‘ரெட்’ அலர்ட் விடுத்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடகிழக்கு அரபிக்கடலை நோக்கி நகர்வதால் சௌராஷ்டிரா மற்றும் கச்சத் இடையே இது தீவிரமடைந்து, அப்பகுதி முழுவதும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Viral Video : குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் ராட்சத முதலைகள்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
வைரல் வீடியோ
vinalin
Vinalin Sweety | Published: 29 Aug 2024 19:34 PM

குஜராத் கனமழை : குஜராத்தில் மிக கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குடியிருப்புகளை சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவி வருகிறது. கடைகள், வணிக வளாகங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் கொட்டித் தீர்து கனமழையின் காரணமாக மழை வெள்ளத்தில் எருமை மாடுகள் அடித்து செல்லப்பட்ட காட்சிகள் சமூக வளைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது குஜராத்தின் குடியிருப்பு பகுதிகளில் 15 அடி நீள முதலை சுற்றித்திரியும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Donald Trump : டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு.. வெளிநாடுகளின் தலையிடல் இல்லை.. FBI திட்டவட்டம்!

குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் ராட்சத முதலைகள்

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் சுமார் 15 அடி நீள ராட்சத முதலை ஒன்று வீட்டின் வாசலில் இருக்கிறது. அந்த முதலையை அந்த பகுதியில் இருக்கும் குடிமக்கள் குச்சிகளை விரட்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இணையத்தில் வெளியான மற்றொரு வீடியோவில், குடியிருப்பு பகுதியில் உலாவும் முதலை ஒரு நாயை கவ்வி இழுத்துக்கொண்டு செல்லும் காட்சிகள் பதிகாயிருந்தது. இதுபோன்று கூடியிருப்பு பகுதிகளில் ஆபத்தான முறையில், முதலைகள் சுற்றித்திரியும் காட்சிகள் அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

28 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மாநிலத்தின் பல பகுதிகளுக்கு ‘ரெட்’ அலர்ட் விடுத்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடகிழக்கு அரபிக்கடலை நோக்கி நகர்வதால் சௌராஷ்டிரா மற்றும் கச்சத் இடையே இது தீவிரமடைந்து, அப்பகுதி முழுவதும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : National Best Teacher Award 2024 : தேசிய நல்லாசிரியர் விருது.. குக்கிராமத்தில் இருந்து தேர்வான கோபிநாத்.. அப்படி என்ன செய்தார்?

மீட்புப் பணிகள் மற்றும் மக்களை பாதுகப்பான இடத்திற்கு வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த மூன்று நாட்களாக அங்கு தொடர் மழை பதிவாகி வருகிறது. கனமழையால் குஜராத் மாநிலமே வெள்ளக்காடாய் மாறியுள்ளது. இதில் சிக்கி தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News