இளைஞரின் கன்னத்தில் கடித்த மலைப் பாம்பு: ரீல்ஸ் மோகத்தில் விபரீதம்!
snake biting a young man : மலைப் பாம்பு ஒன்று இளைஞரின் கன்னத்தை கடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சம்பந்தப்பட்ட இளைஞர் ரீல்ஸ் மோகத்தில் இவ்வாறு சிக்கியுள்ளார்.
இளைஞரின் கன்னத்தை கடித்த பாம்பு: ரீல்ஸ் மோகத்தில் இளைஞர் ஒருவர் மலைப் பாம்புவிடம் கடிவாங்கியுள்ளார். இந்த அதிர்ச்சிகர வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எனினும், வீடியோ எடுக்கப்பட்ட நேரம் மற்றும் இடம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து பார்க்கலாம்.
சமூக வலைதளங்களின் வளர்ச்சிக்கு பின்னர், இந்த உலகம் மிகவும் சுருங்கிவிட்டது என்றால் அது மிகையல்ல. கடந்த காலங்களில் ஒரு செய்தி, சம்பந்தப்பட்ட நபரை சென்றடைய பல நாள்கள் பிடிக்கும்.
ஏன், ஆண்டுகள் பல கழித்து சென்றடைந்த கடிதம் என்பன போன்ற செய்திகளை இன்றளவும் படித்து வருகிறார். ஆனால், சமூக வலைதளங்களின் வளர்ச்சிக்கு பின்னர் குறுஞ்செய்திகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
ரீல்ஸ் மோகம் அதிகரிப்பு
முன்னதாக மின்னஞ்சல் குறிப்பிடத்தக்க சாதனையை சப்தமின்றி செய்தது. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் குறுஞ்செய்திகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அடுத்து, டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளத்தின் வருகைக்கு பின்னர் வீடியோ தொடர்பான செய்திகள் மின்னல் வேகத்தில் பரவின. இதனால் அதிகப்படியான மக்கள் சமூக வலைதள பயனர்களாக மாறினர். மேலும், ரீல்ஸ் மோகமும் அதிகரித்து காணப்பட்டது.
இதையும் படிங்க : ‘சசிதரூர் மடியில் அமர்ந்த குரங்கு’- வைரல் போட்டோ!
அதிகபடியான மக்களை சென்றடையவும், அதிக லைக்குகளை குவிக்கவும் சிலர் கேலிக்கூத்தான செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதன்மூலம் அவர்கள் எதிர்பார்ப்பதை விட அதிகப்படியான லைக் போன்றவற்றை ஈர்க்கின்றனர்.
மேலும், அதிகப்படியான பயனர்களையும் சம்பந்தப்பட்ட காணொலிகள் சென்றடைகின்றன. அந்த வகையில் தற்போது வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கன்னத்தில் கடித்த பாம்பு
சம்பந்தப்பட்ட வீடியோவில் இளைஞர் ஒருவர் மலைப் பாம்பை கையில் பிடித்தபடி, அதற்கு முத்தமிட முயற்சிப்பார். இது தொடர்பான காட்சிகள் பதிவாகி கொண்டிருக்கும் அதே வேளையில் மலைப் பாம்பு இளைஞரின் கன்னத்தை பிடித்து கடித்து வைத்துவிடும். இதைப் பார்க்க பரிதாபமாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட நபரின் செயலுக்கு கிடைத்த தண்டனையாக தான் பார்க்க முடிந்தது.
शायद रील बनाने का शौक़ महंगा पड़ गया 😂😂#RedAlert #Encounter #Spirit #BanSabarmatiInJNU #OneNationOneElection #vivoX200Series #HimalayaAtWAC pic.twitter.com/Z50K88DV2X
— PoonamSharma (@Poonam_1992) December 12, 2024
இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. சமூக வலைதள பயனர்கள் கலவையான விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். மேலும், சில குறும்பான கமெண்டுகளும் இந்த வீடியோவுக்கு கிடைத்துள்ளன. எனினும் பாதுகாப்பு கருதி இதுபோன்ற வீடியோக்களில் யாரும் ஈடுபட வேண்டாம். இது, உயிருக்கு கூட ஆபத்தான முடியலாம். ஆகவே, இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடுவதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Viral Video: சாலையை கடந்த அனகோண்டா.. ஷாக் ஆன பயணிகள்!