5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video : திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்கு செல்ல மறுத்த மணப்பெண்.. குண்டுகட்டாக தூக்கிச் சென்ற குடும்பத்தினர்!

Bride | இந்தியாவை பொருத்தவரை பெரும்பாலான சமூகத்தில் திருமணம் முடிந்த கையோடு, மணப்பெண் கணவன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதுதான் எழுதப்படாத விதியாக உள்ளது. திருமணம் முடிந்த உடன் அந்த பெண்ணிற்கு தனது வீட்டில் இருக்க அனுமதி வழங்கப்படுவதில்லை.

Viral Video : திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்கு செல்ல மறுத்த மணப்பெண்.. குண்டுகட்டாக தூக்கிச் சென்ற குடும்பத்தினர்!
வைரல் வீடியோ
vinalin
Vinalin Sweety | Updated On: 24 Oct 2024 15:27 PM

பொதுவாக திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் எல்லா பெண்களுக்கும் கடினமான சூழலாக தான் இருக்கும். திருமணம் முடிந்து கண்ணீருடன் செல்லும் மணபெண்ணை, குடும்பத்தினரும் கண்ணீருடன் அனுப்பி வைப்பர். ஆனால், திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு செல்ல மறுக்கும் இளம் பெண்ணை, அவரது குடும்பத்தினர் குண்டுகட்டாக தூக்கிச் சென்று வழியனுப்பும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தியாவின் திருமணம் வழக்கம்

இந்தியாவை பொருத்தவரை பெரும்பாலான சமூகத்தில் திருமணம் முடிந்த கையோடு, மணப்பெண் கணவன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதுதான் எழுதப்படாத விதியாக உள்ளது. திருமணம் முடிந்த உடன் அந்த பெண்ணிற்கு தனது வீட்டில் இருக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. மாறாக கணவன் வீட்டில் இருப்பது தான் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு செல்வது சமுதாயத்திற்கு இயல்பானதாக இருந்தாலும், பெண்களுக்கு அப்படி இருப்பதில்லை.

இதையும் படிங்க : Viral Video : 14வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற நபர்.. அடுத்து நடந்தது என்ன.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

சிறு வயது முதல் தான் வளர்ந்த, வாழ்ந்த குடும்பத்தையும், உறவுகளையும் விட்டு பிரிய வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதன் காரணமாக பெண்கள் திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு செல்லும்போது கண்ணீர் மல்க, உணர்ச்சி ததும்ப குடும்பத்தினரிடம் இருந்து விடைபெறுவது வழக்கம். அத்தகைய வீடியோ ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : மணப்பெண்ணை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய தாய்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், மணப்பெண் கோலத்தில் இருக்கும் இளம் பெண் ஒருவர் திருமணம் முடிந்து தனது கணவர் வீட்டிற்கு செல்ல மறுக்கிறார். அவரை சமாதானம் செய்து குடும்பத்தினர் வீட்டு வாசல் வரை அழைத்து வருகின்றனர். ஆனாலும் அழுகையை நிறுத்தாத அந்த இளம் பெண், மீண்டும் மணமகன் வீட்டிற்கு செல்ல மறுக்கிறார். இதனால் பொறுமையை இழக்கும் குடும்பத்தினர், இளம் பெண்ணை குண்டுகட்டாக தூக்கிச் சென்று வீட்டு வாசலில் நிற்கும் காரில் ஏற்றி விடுகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Viral Video : இருசக்கர வாகனம் ஓட்டிய பள்ளி சிறுமி.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ.. இணையத்தில் வைரல்!

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே குடும்பத்தை விட்டு பிரியும் வருத்ததில் இருக்கும் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அனுப்பி வைப்பது அவரின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் பிறக்கும் பெண்களுக்கு உணர்வுகள் இருக்க கூடாதா, ஏன் இந்த வலுக்கட்டாய வழி அனுப்புதல் என்று மற்றொருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க : Viral Video : காதலனை இரும்பு பெட்டியில் அடைத்து வைத்த காதலி.. அடுத்து நடந்தது என்ன?

இணையத்தில் மிக வேகமாக வைரலாகும் வீடியோக்கள்

சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது எளிதாக இணையத்தில் வைரலாகி விடுகிறது. முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் அசாத்தியமான அல்லது முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அது தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே தகவல சென்று சேர்ந்து விடுகிறது. இவ்வாறு செய்தி விரைவாக சென்று சேர்வது பல வகைகளில் நன்மையாக இருக்கிறது. இவ்வாறு விரைவாக தகவல் பரிமாறப்படுவதன் மூலம் குற்ற சம்பவங்கள் எளிதான கண்டறியப்பட்டு அதற்கு விரைவில் தண்டனைகளும் வழங்கபடுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Viral Video : மருத்துவமனைக்கு கையில் பாம்புடன் வந்த நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

இந்த நிலையில் திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு செல்ல மறுக்கும் இளம் பெண்ணை குடும்பத்தினர் வலுக்கட்டாயமாக வழிஅனுப்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News