Viral Video : மணப்பெண்ணை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய தாய்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Marriage Issue | இந்தியாவை பொருத்தவரை திருமணம் மிகவும் புனிதமானவை. மணமகன் மற்றும் மணமள் குடும்பத்தின் முழு சம்மதம் இருந்தால் மட்டுமே திருமணம் செய்ய முடியும். இல்லையெனில் அரசின் உதவியுடன், பதிவு அலுவலகங்களில் தான் திருமணம் செய்ய வேண்டும்.

Viral Video : மணப்பெண்ணை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய தாய்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வைரல் வீடியோ

Published: 

21 Oct 2024 16:51 PM

திருமணத்தின் போது மணமகளை அவரது தாய், தந்தை வாழ்த்தி ஆசிர்வதிப்பதை பார்த்திருப்போம். ஆனால் திருமணத்தின் போது மணமகளின் தாய் அவரை கிரிக்கெட் பேட் கொண்டு தாக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்ட உடனே இணையத்தில் வைரலாக தொடங்கியது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து முழு தகவலை விரிவாக பார்க்கலாம்.

திருமணத்தின் போது மணமகளை தாக்கிய தாய்

இந்தியாவை பொருத்தவரை திருமணம் மிகவும் புனிதமானது. மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தின் முழு சம்மதம் இருந்தால் மட்டுமே தங்களின் சமூக முறைப்படி திருமணம் செய்ய முடியும். இல்லையெனில் அரசின் உதவியுடன், பதிவு அலுவலகங்களில் தான் திருமணம் செய்ய வேண்டும். பெரும்பாலான இந்திய பெற்றோர்களை பொருத்தவரை, பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்படும் திருமணங்களே முறையானவை. இன்றும் கூட பல கிராமங்களில் காதல் திருமணங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை காதல் திருமணம் செய்துக்கொள்ள அனுமதிப்பதில்லை. இந்த நிலையில், திருமணத்தில் மணமகனுக்கு மாலை அணிவிக்கும் மணபெண்ணை அவரது தாய் கிரிக்கெட் பேட் கொண்டு தாக்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : மருத்துவமனைக்கு கையில் பாம்புடன் வந்த நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இளம் ஜோடி ஒன்று, உறுவினர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொள்கிறது. அந்த திருமணம் வழக்கமாக திட்டமிட்டு நடத்தப்படும் திருமணத்தை போல் இல்லாமல் ஏதோ அவசர அவசரமாக நடத்தப்படும் திருமணத்தை போல் உள்ளது. காரணம், திருமணத்திற்கான சிறப்பு உடை ஏற்பாடுகள் எதுவும் அங்கு செய்யப்படவில்லை. ஊர் முன்பு நின்றுக்கொண்டிருக்கும் ஜோடியிடம் பெரியவர்கள் மாலை எடுத்துக் கொடுக்க மணமகள், மணமகனின் கழுத்தில் மாலை அணிவிக்கிறார். அதனை கண்டு ஆத்திரமடைந்த அவரது தாய் மணமகளை கிரிக்கெட் பேட்டால் தாக்குகிறார். இதனால் அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள், மணமகளின் தாயை சமானதம் செய்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் கடைசி நிமிடங்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்திய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதை விடவும் சாதி, மத கோட்பாடுகளை பாதுகாக்கவே விரும்புகின்றனர் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். என்னதான் மணமகளின் தாய்க்கு அந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும் இப்படி பொதுவெளியில் அவரை தாக்குவது அந்த இளம்பெண்ணை இழிவு படுத்துவது போல் உள்ளது என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : Viral Video : சிறுநீர் பயன்படுத்தி சமையல்.. ஓனர் குடும்பத்துக்கு பணிப்பெண் கொடுத்த ஷாக்.!

இணையத்தில் மிக வேகமாக வைரலாகும் வீடியோக்கள்

சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது எளிதாக இணையத்தில் வைரலாகி விடுகிறது. முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் அசாத்தியமான அல்லது முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அது தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே தகவல சென்று சேர்ந்து விடுகிறது. இவ்வாறு செய்தி விரைவாக சென்று சேர்வது பல வகைகளில் நன்மையாக இருக்கிறது. இவ்வாறு விரைவாக தகவல் பரிமாறப்படுவதன் மூலம் குற்ற சம்பவங்கள் எளிதான கண்டறியப்பட்டு அதற்கு விரைவில் தண்டனைகளும் வழங்கபடுவது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!