5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video : அப்பா என் ஐஸ்கிரீமை சாப்பிட்டு விட்டார்.. கியூட்டாக கம்ப்ளெயிண்ட் செய்யும் சிறுமி.. வைரலாகும் வீடியோ!

Little Girl | இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் தனது ஐஸ்கிரீமை, தனது தந்தை சாப்பிட்டு விட்டதாக கண்ணீர் மல்க தனது தாயிடம் புகார் அளிக்கிறார். அவரது மழலை பேச்சு இணையத்தை கவர்ந்த நிலையில், அந்த வீடியோ மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Viral Video : அப்பா என் ஐஸ்கிரீமை சாப்பிட்டு விட்டார்.. கியூட்டாக கம்ப்ளெயிண்ட் செய்யும் சிறுமி.. வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோ
vinalin
Vinalin Sweety | Published: 07 Nov 2024 13:51 PM

ஒவ்வொரு நாளும் இணையத்தில் ஏதேனும் வீடியோ வைரலாகும். அந்த வகையில், தற்போது சிறுமி ஒருவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைராகி வருகிறது. ஐஸ்கிரீமை தனது தந்தை சாப்பிட்டு விட்டதாக அந்த சிறுமி புகார் அளிக்கும் வீடியோதான் அது. இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்டது முதலே ஆயிரக்கணக்கான லைக்குகளைகும், கமெண்டுகளையும் குவித்து வருகிறது. சிறுமியின் அந்த அழகான முறையிடலுக்கு நெட்டிசன்கள் கியூட்டாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

 

View this post on Instagram

 

A post shared by Kids Drama (@kidsdramaa)

ரசிக்க வைக்கும் குழந்தைகளின் குறும்புகள்

குழந்தைகள் என்றாலே குறும்பு தனத்திற்கும், பிடிவாத குணத்திற்கும் பெயர் போனவர்கள். தங்களுக்கு ஏதேனும் வேண்டும் என்றால் அடம் பிடித்து, அழுது அந்த பொருளை எப்படியாவது வாங்கி விடும் ஆசத்திய திறாமை படைத்தவர்கள். அதுமட்டுமன்றி அவர்களது பேச்சு, செயல் உள்ளிட்டவை நம்மை அவ்வப்போது ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். மழலை கொஞ்சும் பேச்சு, சிரிப்பு என அனைத்தும் ரசிக்கும்படியாக இருக்கும். இதனால் குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.

இணையத்தை கவர்ந்த சிறுமியின் வீடியோ

தற்போது அதுபோல தான் இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் தனது ஐஸ்கிரீமை, தனது தந்தை சாப்பிட்டு விட்டதாக கண்ணீர் மல்க தனது தாயிடம் புகார் அளிக்கிறார். அவரது மழலை பேச்சு இணையத்தை கவர்ந்த நிலையில், அந்த வீடியோ மிக வேகமாக வைரலாகி வருகிறது. அதுமட்டுமன்றி, அந்த வீடியோவுக்கு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : Personality Test : உங்கள் விழிகளின் நிறத்தை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என சொல்லிவிடலாம்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் சிறுமி ஒருவர் கையில் ஐஸ்கிரீம் வைத்துக்கொண்டு, தனது தந்தை ஐஸ்கிரீமை சாப்பிட்டு விட்டதாக தனது தாயிடம் புகார் செய்கிறார். கண்ணீர் மல்க அந்த சிறுமி புகார் அளிப்பது பார்பவர்களுக்கு பரிதாபத்துடன் சேர்த்து முகத்தில் சிரிப்பையும் வரவழைக்கும் விதமாக உள்ளது. தனக்கு பெரிய அநீதி இழைக்கப்பட்டது போல அந்த சிறுமி புகார் செய்வது பார்ப்பவரை வியப்பில் ஆழ்த்துகிறது.

இதையும் படிங்க : Viral Video : இடம் இல்லாததால், ரயில் பெட்டியில் படுக்கை தயாரித்த பயணி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

சிறுமியின் புகாரை கேட்டுக் கொண்டிருந்த தாய் உனக்கு எத்தனை ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தேன் என கேட்கிறார். அதற்கு சிறுமி 2 என பதில் அளிக்கிறார். அதற்கு சிறுமியின் தாய், உனக்கு ஒரு ஐஸ்கிரீம் தான், அதுவும் வெண்ணிலா ஐஸ்கிரீம். ஆனால், உன் கையில் இருப்பது சாக்கலேட் ஐஸ்கிரீம். இது உன்னுடையது அல்லா உனது அப்பாவின் ஐஸ்கிரீம் என சிறுமியின் தாய் கூறுகிறார். ஆனால் சிறுமியோ அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அப்பாவின் ஐஸ்கிரீமை எடுத்துக்கொ கொண்டு அப்பா மீதே புகார் செய்யும் சிறுமியின் வீடியோ வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் எளிதாக வைரலாகும் வீடியோக்கள்

தற்போதை  காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. அதனால், எந்த ஒரு அசாத்தியமான மற்றும் ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது மிக வேகமாக இணையதளத்தில் வைரலாகி விடுகிறது. முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் அசாத்தியமான, முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அந்த சம்பவத்தின் தகவல் வெளியே தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும்.

இதையும் படிங்க : Viral Video : கணவனின் ரத்தம் படிந்த படுக்கை.. மனைவியை வைத்து சுத்தம் செய்த மருத்துவமனை!

ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் அதற்கான அவசியம் எதுவுமில்லை. காரணம், இப்போதெல்லாம் தகவல் தொழில் நுட்பத்தின் உதவியால் எந்த ஒரு சம்பவம் நடந்தாலும், அந்த சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே தகவல் வெளியாகி விடுகிறது. அவ்வாறு செய்தி விரைவாக சென்று சேர்வது, மக்களுக்கு பல வகைகளில் நன்மையாக இருக்கிறது. குறிப்பாக விரைவாக தகவல் பரிமாறப்படுவதன் மூலம் குற்றங்கள் எளிதாக கண்டறியப்பட்டு அவற்றுக்கு விரைவில் தண்டனைகளும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News