Viral Video : மருத்துவமனையில் “Party” கொண்டாடிய மருத்துவர்கள்.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ இணையத்தில் வைரல்!
Doctors | வாரணாசியில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி நேரத்தில் நடனமாடிய வீடியோ சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பணி உயர்வுக்காக நடத்தப்பட்ட கொண்டாட்டத்தில் அனைவரும் நடனமாடியுள்ளது தெரிய வந்துள்ளது.
வாரணாசி மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செய்விலியர்கள் நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொருப்புள்ள பதவியில் இருக்கும் மருத்துவர்கள் இவ்வாறு பொருப்பற்று நடந்துக்கொள்வது, நோயாளிகளை பாதிக்கும் என்றும், பணி நேரத்தில் பொருப்பற்று நடந்துக்கொள்ளும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்த முழு தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
डॉक्टर साहब की फुर्ती देखो, नर्सो के साथ नाचने के लिए लौंडो जैसे फुदक रहे हैं ,
वाराणसी जिला अस्पताल में नर्सों के साथ CMS डॉ. दिग्विजय सिंह लगाए ठुमके ! pic.twitter.com/l57JL9Q2Wl
— Gaurav Yadav (@ygauravyadav) November 13, 2024
பணி நேரத்தில் நடனமாடிய மருத்துவர்கள் – சர்ச்சை
வாரணாசியில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி நேரத்தில் நடனமாடிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பணி உயர்வுக்காக நடத்தப்பட்ட கொண்டாட்டத்தில் அனைவரும் நடனமாடியுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மருத்துவமனையில் பார்டியில் ஈடுபட்ட மருத்துவர்கள் அனைவரும் தற்போது விசாரணை வலையத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஒரு அறையில் ஹிந்தி பாடலுக்கு நடனமாடுகின்றனர். அந்த இடத்தில் கூடியிருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்களது கழுத்தில் ஐடி கார்டை அணிந்துள்ளனர். இதன் மூலம் மருத்துவர்கள் பணியில் இருந்துள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் இந்த கொண்டாட்டம் மருத்துவமனையில் கட்டடத்திற்குள் நடைபெற்றுள்ளது அந்த வீடியோ காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க : Viral Video : உலகின் அதிக எடை கொண்ட அனக்கோண்டா.. அசால்டாக தூக்கி போஸ் கொடுத்த இளைஞர்!
இணையத்தில் வேகமாக வைரலாகும் வீடியோக்கள்
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக சமீப காலமாகவே மக்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இத்தகைய சூழலில், எந்த ஒரு அசாத்தியமான மற்றும் ஆச்சர்யமான விஷயம் என்றாலும், அந்த விஷயம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் மிக எளிதாகவும், வேகமாகவும் வைரலாகி விடுகின்றன. அதாவது, தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலக்கட்டத்தில் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் அசாத்தியமான மற்றும் முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அந்த சம்பவத்தின் தகவல் வெளியே மற்ற நாடுகளுக்கோ, மாநிலங்களுக்கு தெரிய வருவதற்கே குறைந்தது ஒரு நாள் ஆகிவிடும்.
இதையும் படிங்க : Viral Video : உடல் முழுவதும் காயம்.. ரத்தக்கறை படிந்த உடை.. டெல்லி சாலையில் சுற்றித்திரிந்த பெண்.. என்ன காரணம்?
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பாதிப்பு
ஆனால் தற்போது அவ்வளவு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம், இப்போதெல்லாம் தொழில்நுட்ப வளர்ச்சியில் உதவியால் எந்த ஒரு சம்பவம் நடந்தாலும், அந்த சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே உலகம் முழுவது தகவல் சென்று சேர்ந்து விடுகிறது. அவ்வாறு செய்தி விரைவாக சென்று சேர்வது, மக்களுக்கு பல வகைகளில் நன்மையாக இருந்தாலும் சில வகைகளில் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக விரைவாக தகவல் பரிமாறப்படுவதன் மூலம் குற்ற சம்பவங்கள் எளிதாக கண்டறியப்பட்டு, குற்றம் செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு குற்றத்திற்கான தண்டனை வழங்கப்படுகிறது. மறுபுறம், சில சம்பவங்களில் ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையே சீர்குலைந்துவிடும் நிலை ஏற்பட்டு விடுகிறது.
இந்த நிலையில், மருத்துவமனையில் மருத்துவர்கள் பார்டி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.