Viral Video : சாலைகளில் பிச்சை எடுக்கும் இன்ஜினியர்.. இணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ!

Bengaluru | இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் சுமார் 30 முதல் 40 வயதுக்கு உட்பட்ட நபர் ஒருவர் சாலைகளில் பிச்சை எடுக்கிறார். சிவப்பு நிற உடை அணிந்திருக்கும் அந்த நபர், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருக்கிறார். அப்போது அவரிடம் ஒருவர் பேச்சு கொடுக்க பிச்சை எடுக்கும் அந்த நபர் சரலமாக ஆங்கிலத்தில் உரையாடுகிறார்.

Viral Video : சாலைகளில் பிச்சை எடுக்கும் இன்ஜினியர்.. இணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ!

வைரல் வீடியோ

Published: 

25 Nov 2024 18:23 PM

பொதுவாக சாலைகளில் முதியவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், வேலை இல்லாதவர்கள் பிச்சை எடுப்பதை பார்த்திருப்போம். சில சமயங்களில் குழந்தைகள் கூட கட்டாயப்படுத்தப்பட்டு பிச்சை எடுப்பதை பார்த்திருப்போம். ஆனால், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காரணம், நன்கு படித்த என்ஜினியர் ஒருவர் பெங்களூரு சாலைகளில் பிச்சை எடுக்கும் வீடியோ தான் அது. இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்டது முதலே மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், அந்த நபர் யார், அவர் ஏன் சாலைகளில் பிச்சை எடுக்கிறார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சாலைகளில் பிச்சை எடுக்கும் என்ஜினியர்

பெங்களூரூவின் சாலைகளில் பிச்சை எடுக்கும் நபர் ஒருவர் தான் இன்ஜினியர் பட்டதாரி என்றும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்ததாகவும் கூறியுள்ளார். அவரது தாய், தந்தையரின் மறைவுக்கு பிறகு அந்த நபர் இவ்வாறு சாலைகளில் பிச்சை எடுத்து வருவதாக அந்த நபரை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்ட நபர் தனது பதிவில் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி, அந்த நபரின் நீண்ட நாள் காதலியும் இறந்துவிட்ட நிலையில், அவர் இவ்வாறு சாலைகளில் பிச்சை எடுத்து வருவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் சுமார் 30 முதல் 40 வயதுக்கு உட்பட்ட நபர் ஒருவர் சாலைகளில் பிச்சை எடுக்கிறார். சிவப்பு நிற உடை அணிந்திருக்கும் அந்த நபர், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருக்கிறார். அப்போது அவரிடம் ஒருவர் பேச்சு கொடுக்க பிச்சை எடுக்கும் அந்த நபர், அவரிடம் சரலமாக ஆங்கிலத்தில் உரையாடுகிறார். அவர் இயற்பியலில் ஏதோ ஒரு புத்தகத்தை பற்றி அவரிடம் பேசுகிறார். அவரின் ஆங்கில பேச்சு அவர் நன்கு படித்தவர் என்பதை காட்டும் விதமாக உள்ளது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Viral Video: சினிமா பாணியில் நடந்த சம்பவம்.. உயிரை பணையம் வைத்து மணமகன் செய்த செயல்.. வைரல் வீடியோ!

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ மிக வேகமாக இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், நாம் மிகவும் நேசிக்கும்  நமது உறவுகள் நம்மை விட்டு பிரிந்துவிட்டால் நாம் என்னவாக மாறுவோம் என்பதற்கு இவர் ஒரு சாட்சி என்று பதிவிட்டுள்ளார். வாழ்க்கையில் படிப்பு, வேலை எது இருந்தாலும் நாம் நேசித்தவர்கள் இல்லை என்றால் அனைவருக்கும் இதுதான் நிலை என்று பதிவிட்டுள்ளார். மேலும் சிலர், அவர் இழந்த வாழ்க்கையை அவருக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்றும், அரசு அவருக்கு மறுவாழ்வு பெற உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் மீது அக்கறையுடன் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : Viral Video : உணவகத்தின் வாசலில் 30 நிமிடம் காத்திருந்த நயன்தாரா-விக்னேஷ் சிவன்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் மிக வேகமாக வைரலாகும் வீடியோக்கள்

முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் வித்தியாசமான நிகழ்வு நடந்தது என்றால் அது குறித்த தகவல் வெளியே தெரிவதற்கே பல நாட்கள் ஆகிவிடும். ஆனால், தற்போது அதற்கான தேவை இல்லை. இணைய வசதியால் எந்த ஒரு வித்தியாசமான அல்லது வியக்கத்தக்க நிகழ்வுகள் நடந்தாலும் அவை மிக எளிதாக இணையத்தில் வைரலாகி விடுகிறது.

தோல்வியில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?