5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video : ரிஷிகேஷில் பிகினி அணிந்து நீராடிய வெளிநாட்டவர்கள்.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ!

Rishikesh | இந்துக்களின் புனித தளமான ரிஷிகேஷில் வெளிநாட்டவர்கள் நீச்சல் உடையில் நீராடிய வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கலாச்சாரமும், பன்பாடும் மிக்க ரிஷிகேஷ் விரைவில் பாங்காக்காக மாறிவிடும் என ஹிமாலயன் இந்து என்கிற எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Viral Video : ரிஷிகேஷில் பிகினி அணிந்து நீராடிய வெளிநாட்டவர்கள்.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ!
வைரல் வீடியோ
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 09 Jul 2024 16:50 PM

ரிஷிகேஷில் நீராடிய வெளிநாட்டவர்கள் : இந்துக்களின் புனித தளமான ரிஷிகேஷில் வெளிநாட்டவர்கள் நீச்சல் உடையில் குளிக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான நதிகள் இந்துக்களின் வழிபாட்டு தளங்களாக உள்ளன. நதிகளில் புனித தன்மை இருப்பதாக கருதும் மக்கள் அவற்றை தெய்வங்களாக வழிபடுகின்றனர். அதுமட்டுமன்றி புனித நதிகளில் நீராடினால் தங்களது பாவங்கள் கறையும் என்ற நம்பிக்கையில், கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட நதிகளுக்கு புனித யாத்திரைகளும் மேற்கொள்கின்றனர். அவ்வாறு புனித தன்மை வாய்ந்ததாக கருதப்படும் இடங்களில் ஒன்றுதான் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ்.

நீச்சல் உடையில் நீராடிய வெளிநாட்டவர்கள்

இந்நிலையில் இந்துக்கள் புனித தளமாக கருதப்படும் ரிஷிகேஷில் வெளிநாட்டவர்கள் பிகினி என்று அழைக்கப்படும் நீச்சல் உடையில் குளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ ஹிமாலயன் இந்து எனற எக்ஸ் பக்கத்தில் பதுவிடப்பட்டுள்ளது. அதில், பவித்ர கங்காவை கோவாவாக மாற்றியதற்கு நன்னி புஷ்கர் சிங் தாமி. ரிஷிகேஷில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாது. விரைவில் இது பாங்காக்காக மாறிவிடும் என்று உத்தரகாண்ட் முதகமைச்சரை டேக் செய்து பதிவிடப்பட்டுள்ளது.

சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ

மதமும் கலாச்சாரமும் சீரழிவதாக அந்த எக்ஸ் தளத்தில் வீடியோ பதிவிடப்பட்டிருந்தாலும் அதற்கு எதிர்மறையான கருத்துக்கள் குவிய தொடங்கிவிட்டன. இது குறித்து கருத்து தெரிவித்த பயனர் ஒருவர், ஆமாம், இது இந்திய கலாச்சரம் இல்லை. ஏன் அவர்கள் இந்தியர்களை போல கால் சட்டை அணியாமல், நீச்சல் உடைகளை அணிந்துள்ளனர். ஏன் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு பயனர், இதில் தவரு ஒன்றுமில்லை. உங்களுக்கு உடைகளில் பிரச்னை இருக்கிறது என்றால், நீங்கள் வளர்ந்த விதத்தில் தான் தவறு என ஆடை சுதந்திரத்தை முன் நிறுத்தி கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பது நன்றாக புரிகிறது. நதிகளில் பிளாஸ்டிக் பைகளை போட்டு மாசு படுத்துவதற்கு, நீச்சல் உடையில் குளிப்பது எவ்வளவோ பரவாயில்லை என சுற்றுசூழலை முன்னிறுத்தி கருத்து தெரிவித்துள்ளார்.

Latest News