Viral Video : ஆசிரியையின் கால்களை மசாஜ் செய்த அரசு பள்ளி மாணவர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Government School | தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவர்கள் கழிவறையையும் சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள திம்மச்சூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு மதிய உணவு இடைவேளையின்போது மாணவர்கள் கழிவறையை கழுவும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பள்ளிக்கூடம் என்பது மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடிய முக்கிய இடமாகும். பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவர்கள் கல்வியை மட்டுமன்றி, ஒழுக்கம், வாழ்க்கை பாடம் ஆகியவற்றையும் கற்றுக்கொள்கின்றனர். மாணவர்கள் பள்ளியில் இருக்கும்போது, அவர்களது அறிவாற்றலும், செயல்திறனும் வளர வேண்டும் என்பதுதான் பெற்றோர்களின் கனவாக உள்ளது. ஆனால் , அரசு பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், ஜெய்ப்பூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை ஒருவர் மாணவர்களை தனது கால்களை மசாஜ் செய்ய வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
स्कूल टीचर का वीडियो हुआ वायरल. pic.twitter.com/ReTUYkEPoj
— Prashant rai (@prashantrai280) October 10, 2024
இணையத்தில் வைரலாகும் வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், அரசு பள்ளி வகுப்பறை ஒன்றில் ஆசிரியை ஒருவர் தரையில் படுத்துக்கொண்டிருக்கிறார். அவரின் அருகில் சில மாணவர்கள் நின்றுக்கொண்டு, மசாஜ் செய்வது போல் ஆசிரியையின் கால்கள் மீது ஏறி நின்றுக்கொண்டிருக்கின்றனர். வகுப்பு நேரத்தில் மாணவர்களுக்கு பாடம் சொல்லி தராமல், கால்களுக்கு மசாஜ் செய்ய வைக்கும் வீடியோதான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.
இதையும் படிங்க : Viral Video : திருமண கோலத்தில் ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டிய இளம் பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
ஆசிரியையின் செயலுக்கு நெட்டிசன்கள் கண்டனம்
இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வரும் நிலையில், அரசு பள்ளி ஆசிரியையின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல கனவுகளுடன் பள்ளிக்கு படிக்க அனுப்பப்படும் மாணவர்கள் இவ்வாறு ஆசிரியர்கள் தங்களது சொந்த தேவைகளுக்கான பயன்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் மற்றும் பொருளாதார சூழல்களால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை குறைந்த செல்வில் அரசு பள்ளிகளில் படிக்க வைக்கும் நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்கள் அதை தவறாக பயன்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று. இது குறித்து அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க : Viral Video : கனடாவில் ஓட்டல் பணியில் சேர வரிசையில் காத்திருந்த இந்திய மாணவர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்
இதேபோல தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவர்கள் கழிவறையையும் சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள திம்மச்சூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு மதிய உணவு இடைவேளையின்போது மாணவர்கள் கழிவறையை கழுவும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு அரசு பள்ளிகளில் தொடர்ந்து குற்றங்கள் நடைபெறுவது மாணவர்களின் கல்வியை பாதிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க : Viral Video : காட்டில் பதிவு செய்யப்பட்ட “Big Foot” வீடியோ? அதில் இருக்கும் ராட்சத விலங்கு உண்மையானதா?
இணையத்தில் மிக வேகமாக வைரலாகும் வீடியோக்கள்
சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது எளிதாக இணையத்தில் வைரலாகி விடுகிறது. முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் அசாத்தியமான அல்லது முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அது தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே தகவல சென்று சேர்ந்து விடுகிறது. இவ்வாறு செய்தி விரைவாக சென்று சேர்வது பல வகைகளில் நன்மையாக இருக்கிறது. இவ்வாறு விரைவாக தகவல் பரிமாறப்படுவதன் மூலம் குற்ற சம்பவங்கள் எளிதான கண்டறியப்பட்டு அதற்கு விரைவில் தண்டனைகளும் வழங்கபடுவது குறிப்பிடத்தக்கது.