5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video : ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் கடைசி நிமிடங்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Yahya Sinwar | காசாவில் கடந்த ஒரு  ஆண்டு காலமாக நீடித்து வரும் இந்த போரால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்து உள்ளது. காசா மக்கள் மீது மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் இஸ்ரேலிடம் கோரிக்கை வைத்த நிலையிலும், இஸ்ரேல் போரை நிறுத்திய பாடில்லை.

Viral Video : ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் கடைசி நிமிடங்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோ
vinalin
Vinalin Sweety | Published: 18 Oct 2024 13:18 PM

காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவர், யாஹ்யா சின்வார் கொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. இஸ்ரேலின் இந்த தகவல் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், யாஹ்யா சின்வாரின் கடைசி நிமிட வீடியோ மற்றும் அவர் இறந்த பிறகு அவரது உடல் மீட்கப்படும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில், இஸ்ரேலின் இந்த செயலுக்கு ஹமாஸ் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்திய ஹமாஸ்

கடந்த அகடோபர் 7, 2023 அன்று இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர், இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலை சேர்ந்த சுமார் 1,139 மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அதுமட்டுமன்றி 251 இஸ்ரேலியர்களை பணைய கைதிகளாகவும் ஹமாஸ் கடத்திச் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் மீது போர் தொடுத்தது. அதன்படி, கடந்த ஒரு ஆண்டுகாலமாக இந்த போர் நீடித்து வருகிறது. இஸ்ரேலின் இந்த பதிலடி தாக்குதலில் காசாவில் இதுவரை சுமார் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க : Meta : சேவைகளை தவறாக பயன்படுத்திய ஊழியர்கள்.. பணி நீக்கம் செய்து ஷாக் கொடுத்த மெட்டா!

யாஹ்யா சின்வாரின் கடைசி நிமிடங்கள்

காசாவில் கடந்த ஒரு  ஆண்டு காலமாக நீடித்து வரும் இந்த போரால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்து உள்ளது. காசா மக்கள் மீது மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் இஸ்ரேலிடம் கோரிக்கை வைத்த நிலையிலும், இஸ்ரேல் போரை நிறுத்திய பாடில்லை. தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் தற்போது, காசா மீது வான்வழி தாக்குதல் நடத்தி ஹமாஸ் தலைவரை கொலை செய்துள்ளது. ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் கடைசி நிமிடங்களை ட்ரோன் காட்சிகள் படம் பிடித்துள்ள நிலையில், அந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : DA Hike : தமிழக அரசு ஊழியர்களுக்கும் 3% அகவிலைப்படி உயர்வு.. முதல்வருக்கு எழுந்த கோரிக்கை!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் யாஹ்யா சின்வாரின் கடைசி நிமிட வீடியோவில், ஒரு இடிந்த கட்டடத்திற்குள் ட்ரோன் கேமரா செல்கிறது. புழுதியும், தூசியும் நிறைந்துள்ள அந்த கட்டடத்திற்குள் ஒரு சோபாவில் யாஹ்யா சின்வார் அமர்ந்துக்கொண்டிருக்கிறார். அவர் மீது கட்டடத்தின் புழுதி மற்றும் தூசிகள் படிந்துள்ளது. தலையை கீழே பார்த்தபடி நிலைதடுமாறி இருக்கும் அவர், ட்ரோன் தனக்கு அருகில் வந்ததும் ஒரு குச்சியை எடுத்து அந்த ட்ரோனை தாக்க முயலுகிறார். இவை அனைத்தும் அந்த ட்ரோன் காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Tamilnadu Weather Alert: மழைக்கு ரெடியா மக்களே..! மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி..

பற்களை வைத்து கண்டறியப்பட்ட யாஹ்யா சின்வாரின் உடல்

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் உடல் கட்டட இடிபாடுகளில் சிக்கி சேதமடைந்த நிலையில், அவரது கைரேகை மற்றும் பற்களை வைத்து அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள இஸ்ரேல், யாஹ்யா சின்வார் ஒரு தளபதி, அவரை இஸ்ரேல் கொலை செய்துவிட்டது என்று கூறியுள்ளது.

Latest News