Viral Video : கை விலங்குடன் பைக் ஓட்டிய கைதி.. ஜாலியாக பின்னால் அமர்ந்து சென்ற போலீஸ்.. வைரல் வீடியோ!
Accused | பொதுவாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் குற்றவாளிகள் ஒன்று அல்லது இரண்டு காவலர்களின் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்படும் நிலையில், மணிப்பூரில் ஒரு காவலர் குற்றவாளியையே நீதிமன்றத்திற்கு செல்ல இரு சக்கர வாகனத்தை ஓட்ட வைத்துள்ளார்.
சமூக ஊடகங்களின் உதவியாலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் உலகின் ஏதாவது ஒரு மூலையில் ஏதேனும் ஒரு அசாத்தியமான நிகழ்வோ அல்லது, முக்கிய நிகழ்வு நடந்தாலோ அது உலகம் முழுவதும் மிக விரைவில் தெரிந்துவிடும். அந்த வகையில், கைது ஒருவர் கை விலங்குடன் காவலரை பைக்கில் பின்னால் அமர வைத்து வாகனம் ஓட்டிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் குற்றவாளி இவ்வாறு பாதுகாப்பு இன்றி அழைத்துச்செல்லப்படுவது குறித்தும், கை விலங்குடன் குற்றவாளி பைக் ஓட்டுவது குறித்தும் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோ குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
UP: मैनपुरी पुलिस का अजब-गजब कारनामा आया सामने हथकड़ी लगा मुजरिम सिपाही को बाइक से ले जा रहा।
पेशी के लिए ले जाते बाइक पर ले जाने का वीडियो मुजरिम खुद सिपाही को बाइक पर बैठाकर ले जा रहा।
थाना भौंगांव क्षेत्र का बताया जा रहा मामला।@mainpuripolice जांच कर कार्रवाई
करे। pic.twitter.com/0qIvU4fddC— Manish Yadav (@ManishY78062388) December 13, 2024
இணையத்தில் வைரலாகும் வீடியோ
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் காவலர் ஒருவர் குற்றவாளியை அழைத்துச் செல்கிறார். வழக்கமாக குற்றவாளிகள் தப்பித்துச் செல்லாமல் இருக்க பாதுகாப்புடன் அழைத்துச் செல்லபப்டுவர். ஆனால், தற்போது இணையத்தில் வைரலாகும் வீடியோவில், காவலர் ஒருவர் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்துக்கொண்டு பயணிக்கும் நிலையில் கைதி பைக் ஓட்டி செல்கிறார். அதுவும் அந்த கைதி தனது கைகளில் கை விலங்கு அணிந்துள்ளார். இவை அனைத்தும், இருசக்கர வாகனத்தின் பின்னால் சென்ற காரில் இருந்து பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Viral Video : ரயிலில் தொங்கியபடி ரீல்ஸ்.. இளம் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோவை இணையத்தில் பதிவிட்ட நபர்
இந்த வீடியோவை மனிஷ் யாதவ் என்ற நபர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது குறித்து பதிவிட்டுள்ள அவர், போலீஸ் அதிகாரியின் மோசமான செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கையில் விலங்குடன் கைதி ஒருவர் காவலரை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்கிறார். அந்த குற்றவாளி வழக்கில் ஆஜர் படுத்தபப்டுவதற்காக நீதிமன்றத்திஅழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அதுவும் அந்த குற்றவாளியே நீதிமன்றத்தில் ஆஜராக இரு சக்கர வாகனத்தை ஓட்டி செல்கிறார் என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : Viral Video : குப்பை கேட்டு குழந்தையை போல் அழும் குப்பைத் தொட்டி.. இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வைரல் வீடியோ குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதாவது, தனது கையில் வாய்ப்பு கிடைத்தும் அதை பயன்படுத்தி தப்பித்து செல்லாமல் தானே நீதிமன்றத்திற்கு வாகனத்தை ஓட்டிச் செல்லும் குற்றவாளியை பாராட்டுவதாக ஒருவர் பதிவிட்டுள்ளார். குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லாமல் கை விலங்குடன் இரு சக்கர வாகனம் ஓட்ட வைத்துள்ளதாக பலரும் அந்த காவலருக்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.