Viral Video : “Alexa Launch the Rocket”.. நவீன முறையில் பட்டாசு வெடித்த இளைஞர்.. இணையத்தை கலக்கும் வீடியோ!
Crackers | நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடை அணிந்து, இனிப்புகளை வழங்கி மக்கள் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசுகள் தான்.
நாடு முழுவதும் இன்ரு (அக்டோபர் 31) தீபாவளி பண்டிகை மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இளைஞர் ஒருவர் அமேசானின் Alexa மூலம் பட்டாசு வெடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த சம்பவம் எங்கு நடந்தது, அந்த வைரல் வீடியோவில் இடம் பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கோலாகலமாக கொண்டாடப்படும் தீபாவளி
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடை அணிந்து, இனிப்புகளை வழங்கி மக்கள் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசுகள் தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பட்டாசு வெடித்து கொண்டாடுவர். தங்கள் கவலைகளை எல்லாம் மறந்து பட்டாசு வெடிப்பது தீபாவளி பண்டிகையின் தனி சிறப்பாகவே உள்ளது.
இதையும் படிங்க : One Nation One Election : ஒரே நாடு, ஒரே தேர்தல் விரைவில் வரும்.. பிரதமர் மோடி திட்டவட்டம்!
என்னதான் பட்டாசு மகிழ்ச்சியை தந்தாலும் அது ஆபத்தானதும் கூட. தீபாவளி தினத்தில் பட்டாசுகளால் ஏற்பட்ட விபத்துகளும் அதிகம். அதனால் தான், பெரியவர்கள் குழந்தைகள் அல்லது இளைஞர்களை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்க மாட்டார்கள். அதுமட்டுமன்றி, பட்டாசு வெடிக்கும் போது திடீரென தீப்பற்றிக்கொண்டால் அணைப்பதற்காக தண்ணீர், காயம் ஏற்பட்டு விடாமல் இருக்க பெரிய ஊது வத்தி உள்ளிட்டவற்றையும் பயன்படுத்துவர். ஆனால் இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் ஊதுவத்தி, தீக்குச்சி எதுவும் இல்லாமல் இளைஞர் ஒருவர் பட்டாசு வெடிக்கிறார்.
இதையும் படிங்க : Tamilnadu Weather Alert : கொட்டித் தீர்க்கும் கனமழை.. பட்டாசு வெடிக்க முடியாமல் தவிக்கும் மக்கள்.. இன்றைய மழை நிலவரம் என்ன?
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் தனது வீட்டு மொட்டை மாடியில் பட்டாசு வெடிக்கிறார். பட்டாசு வெடிக்கும் அந்த நபர், வழக்கமான நபர்களை போல கையில் ஊதுவந்தி, தீக்குச்சி உள்ளிட்ட எதையும் வைத்துக்கொள்ளாமல் இருக்கிறார். அதற்கு மாறாக அவர், தண்ணீர் பாட்டில் போல தோற்றமளிக்கும் குவலை ஒன்றின் மீது பட்டாசை வைத்துவிட்டு அதில் இரண்டு வயர்களையும் இணைத்துள்ளார்.
இதையும் படிங்க : Share Market : தீபாவளியில் கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை.. இன்றைய நிலவரம் என்ன?
இந்த ஏற்பாடுகளுக்கு அருகே அமேசான் நிறுவனத்தின் அலக்சா பிளேயரும் உள்ளது. அப்போது அந்த இளைஞர், அலக்சா லாஞ்ச் ராக்கெட் என்றதும் குவலையில் இருந்த ராக்கெட் சரசரவென மேலே சென்று வெடிக்கிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் மிக வேகமாக வைரலாகும் வீடியோக்கள்
தற்போதைய காலக்கட்டத்தில் சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. இதன் மூலம், எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது மிக சுலபமாக சமூக வளைத்தளங்களில் வைரலாகி விடுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன்பு, வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அந்த தகவல் வெளியே தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும்.
இதையும் படிங்க : IPL Retention 2025: தீபாவளியன்று இரட்டை வெடி.. தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிடும் ஐபிஎல் அணிகள்..!
ஆனால் தற்போது அவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. காரணம், இப்போதெல்லாம் தகவல் தொழில்நுட்பத்தின் முலம் எந்த ஒரு சம்பவம் நடந்தாலும், அது நடந்த சில நொடிகளிலேயே உலகம் முழுவதும் தகவல் சென்று சேர்ந்து விடும். இதுபோல செய்தி விரைவாக சென்று சேர்வது பல வகைகளில் நன்மையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக விரைவாக தகவல் பரிமாறப்படுவதால் குற்ற சம்பவங்கள் எளிதாக கண்டறியப்பட்டு அதற்கு விரைவில் தண்டனை வழங்கபடுவது குறிப்பிடத்தக்கது.