Viral Video : உலகின் அதிக எடை கொண்ட அனக்கோண்டா.. அசால்டாக தூக்கி போஸ் கொடுத்த இளைஞர்!
Giant Anaconda | மைக் ஹால்ஸ்டன் என்ற நபர் விலங்குகள் மீது அதிக ஆர்வம் கொண்ட நபர். இவர் விலங்குகள் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக அவ்வப்போது செய்யும் சில விஷயங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும். இவர் விலங்குகளின் மீது கொண்டுள்ள அதீத அன்பு மற்றும் அவற்றுடன் நெருக்கமாக இருப்பதாலும் இவருக்கு "The Real Tarzan" என சிறப்பு பெயரும் உண்டு.
பெரும்பாலான மக்களுக்கு பாம்புகள் மீது பயம் இருக்கும். காரணம், பாம்புகள் விஷ தன்மை கொண்டவை. அவை கடித்தால் ஒரு சில நிமிடங்களில் உயிரே போய்விடும் அபாயம் உள்ளது. எல்லா பாம்புகளும் விஷ தன்மை கொண்டவை இல்லை என்றாலும், ஒருசில குறிப்பிட்ட வகை பாம்புகள் தீவிர விஷ தன்மை கொண்டவை. இதன் காரணமாக பாம்பை கண்டாலே பலரும் அஞ்சுவர். பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என பழமொழி கூட உண்டு. ஆனால் ஒரு இளைஞர், உலகத்தின் அதிக எடை கொண்ட அனக்கோண்ட பாம்பு ஒன்றை அசால்டாக தூக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
உலகின் அதிக எடை கொண்ட அனக்கோண்டா
மைக் ஹால்ஸ்டன் என்ற நபர் விலங்குகள் மீது அதிக ஆர்வம் கொண்ட நபர். இவர் விலங்குகள் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக அவ்வப்போது செய்யும் சில விஷயங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும். இவர் விலங்குகளின் மீது கொண்டுள்ள அதீத அன்பு மற்றும் அவற்றுடன் நெருக்கமாக இருப்பதாலும் இவருக்கு “The Real Tarzan” என சிறப்பு பெயரும் உண்டு. இதன் காரணமாக இவரை மைக் ஹால்ஸ்டன் என அழைப்பதற்கு பதிலாக டார்சன் என்றே பெரும்பாலான மக்கள் செல்லமாக அழைக்கின்றனர்.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
மைக் ஹால்ஸ்டன் பொதுவாகவே அசாத்தியமான செயல்களை செய்வதற்கு பெயர் போனவர். அதிலும் குறிப்பாக விலங்குகள் தொடர்பான பல விஷயங்களை அவர் செய்து வருகிறார். இந்த நிலையில், உலகில் அதிக எடை கொண்டதாக கருதப்படும் பச்சை நிற அனக்கோண்டாவை தூக்கி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார். பொதுவாகவே அனக்கோண்ட பாம்புகள் பார்ப்பதற்கு பெரிய தோற்றம் கொண்டிருப்பதை மட்டுமன்றி, அதிக எடையும் கொண்டிக்கும். இந்த நிலையில், உலகின் அதிக எடை கொண்ட அனக்கோண்டா பாம்பை ஹால்ஸ்டன் தூக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Viral Video : மாறி மாறி கட்டையால் தாக்கிக் கொண்ட பெண்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வேகமாக வைரலாகும் வீடியோக்கள்
தற்போதைய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த சூழலில், எந்த ஒரு அசாத்தியமான மற்றும் ஆச்சர்யமான விஷயம் என்றாலும், அந்த விஷயம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் மிக வேகமாக வைரலாகி விடுகின்றன. அதாவது, முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் அசாத்தியமான, முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அந்த சம்பவத்தின் தகவல் வெளியே மற்ற நாடுகளுக்கோ, மாநிலங்களுக்கு தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும்.
இதையும் படிங்க : Viral Video : அப்பா என் ஐஸ்கிரீமை சாப்பிட்டு விட்டார்.. கியூட்டாக கம்ப்ளெயிண்ட் செய்யும் சிறுமி.. வைரலாகும் வீடியோ!
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பாதிப்பு
ஆனால் தற்போது அவ்வளவு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. காரணம், இப்போதெல்லாம் தகவல் தொழில் நுட்பத்தின் உதவியால் எந்த ஒரு சம்பவம் நடந்தாலும், அது சில நொடிகளிலேயே உலகம் முழுவது தகவல் சென்று சேர்ந்து விடுகிறது. அவ்வாறு செய்தி விரைவாக சென்று சேர்வது, மக்களுக்கு பல வகைகளில் நன்மையாக இருக்கிறது அதே சமயம் சில பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக விரைவாக தகவல் பரிமாறப்படுவதன் மூலம் குற்ற சம்பவங்கள் எளிதாக கண்டறியப்பட்டு, அவற்றுக்கு விரைவில் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இதே போல, சில சம்பவங்களில் ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை சீர்குலைந்துவிடும் ஆபத்துகளும் உள்ளது.