Viral Video : நிஜ வாழ்க்கை Subway Surfer இதுதானா.. ரயிலின் மேற்கூரையில் படுத்துக்கொண்டு பயணித்த நபர்!
Train Travel | உலகில் பல வகையான ரயில் பயணங்களை பாத்திருப்போம். ஆனால், இளைஞர் ஒருவர் மிகவும் வித்தியாசமான முறையில் ரயிலின் மேற்கூரையின் மீது படுத்துக்கொண்டு பயணிக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
ஒவ்வொரு நாளும் இணையத்தில் பல விதமான மற்றும் வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைராலி வருவகின்றன. அந்த வகையில், தற்போது ஒரு வீடியோ மிக வேகமாக வைரலாகி வருகிறது. அதனை பார்க்கும் இணைய வாசிகள் இதுதான் நிகழ் வாழ்க்கை Subway Surfer போல என்று பலரும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதாவது, கண்டெண்ட் கிரியேட்டர் ஒருவர் ரயிலின் மேற்கூரையில் படுத்துக்கொண்டு பயணிக்கும் வீடியோதான் அது. இந்த வீடியோ மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், வைரல் வீடியோ குறித்த முழு தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
பொதுவாக கண்டெண்ட் கிரியேட்டர்கள் உணவுகள், கடைகள், பொருட்கள் மற்றும் உடைகள் குறித்து விமர்சனம் செய்து வீடியோ பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், கண்டெண்ட் கிரியேட்டர் ஒருவர் மிகவும் வித்தியாசமான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது, பொதுவாக ரயிலின் உள்ளே இருக்கைகளில் அமர்ந்துக்கொண்டு பயணிப்பது, ரயில் படிக்கட்டுகளில் நின்றுக்கொண்டு பயணிப்பது உள்ளிட்டவற்றை பார்த்திருப்போம். ஆனால், அந்த இளைஞரோ, ரயிலின் மேற்கூரையில் படுத்துக்கொண்டு பயணிக்கிறார். அதை அவர் தனது மொபைல் போனிலும் வீடியோ பதிவு செய்கிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நபர்
இந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அந்த இளைஞர், இதை யாரும் முயற்சிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சோதனை செய்து பார்க்கும்போது, அவர் இதுபோல பல வித்தியாசமான மற்றும் ஆபத்தான ரயில் பயணங்களை மேற்கொண்டு வருவது தெரிகிறது. இவரின் இந்த செயலுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சிலர் ஆதரவாகவும் உற்சாகம் ஊட்டும் வகையிலும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க : Viral Video : சிக்னல் செய்து வழிவிட சொன்ன யானை.. இணையத்தை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கிய வீடியோ!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைராலி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதுதான் நிக வாழ்க்கை Subway Surfer விளையாட்டா என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் பிரபலமாக வேண்டும் என்று இத்தகைய ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடுவது தவறான முன்னுதாரனம் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். மேலும், இத்தகைய ஆபத்தான செயலில் ஈடுபட்டு அதை வீடியோ பதிவு செய்த நபருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் ஒருவர் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.