Viral Video : பிறந்தநாள் கேக்கில் எடுக்க எடுக்க வந்த 500 ரூபாய் நோட்டுகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ! - Tamil News | A video of money stuffed birthday cake goes viral on internet | TV9 Tamil

Viral Video : பிறந்தநாள் கேக்கில் எடுக்க எடுக்க வந்த 500 ரூபாய் நோட்டுகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Birthday | சமூக ஊடகங்களிலும், மக்கள் மத்தியிலும் ட்ரெண்ட் என்ற வார்த்தைதான் மிகவும் பிரபலமாக உள்ளது. உடைகள் முதல் பாடல்கள் வரை குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு சில விஷயங்கள் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்துவிடுகின்றன. அந்த வகையில், பிறந்தநாளுக்கு விதவிதமாக கேக்குகள் வெட்டுவது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Viral Video : பிறந்தநாள் கேக்கில் எடுக்க எடுக்க வந்த 500 ரூபாய் நோட்டுகள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வைரல் வீடியோ

Published: 

30 Oct 2024 17:41 PM

சமீப காலமாகவே இளைஞர்கள் மற்றும் காதலர்கள் மத்தியில் வித்தியாசமாக பிறந்தநாள் கேக்குகளை வெட்டுவது ஒரு டிரெண்ட் ஆக உள்ளது. அந்த வகையில், 500 ரூபாய் நோட்டுகளால் தயாரிக்கப்பட்ட கேக்கின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் இது கேக்கா அல்லது ஏடிஎம் இயந்திரமா என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த வைரல் வீடியோ குறித்த தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

இளம் பெண்ணின் பிறந்தநாள் கேக் வீடியோ வைரல்!

சமூக ஊடகங்களிலும், மக்கள் மத்தியிலும் ட்ரெண்ட் என்ற வார்த்தைதான் மிகவும் பிரபலமாக உள்ளது. உடைகள் முதல் பாடல்கள் வரை குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு சில விஷயங்கள் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்துவிடுகின்றன. அந்த வகையில், பிறந்தநாளுக்கு விதவிதமாக கேக்குகள் வெட்டுவது ட்ரெண்ட் ஆகி வருகிறது. பிறந்தநாள் கொண்டாடும் நபரின் உருவம் பதித்த கேக், அவருக்கு பிடித்த விஷயங்கள் அடங்கிய கேக், விலங்குகள் பிரியர் என்றால் அதற்கு ஏற்றார்போல் பூனை, நாய் உள்ளிட்ட உருவங்கள் பதித்த கேக் என வித்தியாச வித்தியாசமான கேக்குகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் இளம் பெண் ஒருவர் தனது பிறந்தநாளுக்கு வெட்டிய கேக்கின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : விபத்துக்குள்ளான கேரள முதலமைச்சர் கான்வாய்.. அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்.. சிசிடிவி காட்சி!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், இளம் பெண் ஒருவர் பிறந்தநாள் கொண்டாடுகிறார். அந்த கொண்டாட்டத்தில் அந்த இளம் பெண்ணுடன் சில நண்பர்களும் பங்கேற்றுள்ளனர். பிறந்தநாளை முன்னிட்டு அந்த பெண்ணுக்கு பரிசளிக்கப்பட்ட அந்த கேக்கில் எடுக்க எடுக்க 500 ரூபாய் நோட்டுகள் வந்துக்கொண்டே இருக்கிறது. அத்தனை 500 ரூபாய் நோட்டுக்களை பார்த்து வியப்படைந்த அந்த இளம் பெண் தனது நண்பர்களிடம் கேட்கிறார். உடனடியாக நண்பர்கள் மத்தியில் இருக்கும் ஒருநபர் எந்த பணத்தை எடுப்பதற்கு அந்த இளம் பெண்ணுக்கு உதவி செய்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Viral Video: ஹரியானாவில் சாலையில் பறந்த வாகனங்கள்.. மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இணையத்தில் மிக வேகமாக வைராகும் வீடியோக்கள்

சமீப காலமாகவே சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. இதன் விளைவாக, எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது மிக எளிதாக இணையதளத்தில் வைரலாகி விடுகிறது. முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் அசாத்தியமான அல்லது முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அந்த தகவல் மற்ற நாடுகளுக்கோ அல்லது மாநிலங்களுக்கோ தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும்.

இதையும் படிங்க : Viral Video : இதுதான் தேசப்பற்று.. தேசிய கீதம் பாடும்போது அசையாமல் நின்ற பெயிண்டர்.. வைரல் வீடியோ!

ஆனால் தற்போது அதற்கான அவசியம் எதுவும் இல்லை. காரணம், இப்போதெல்லாம் தகவல் தொழில் நுட்பத்தின் உதவியால் சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே உலகம் முழுவதும் தகவல் சென்று சேர்ந்து விடுகிறது. இவ்வாறு செய்தி விரைவாக சென்று சேர்வது பல வகைகளில் நன்மையாக இருக்கிறது. அதில் குறிப்பாக விரைவாக தகவல் பரிமாறப்படுவதன் மூலம் குற்ற சம்பவங்கள் எளிதாக கண்டறியப்பட்டு அதற்கு விரைவில் தண்டனைகளும் வழங்கபடுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Viral Video : கைகள் இல்லை.. தன்னம்பிக்கை மட்டும்தான்.. இணையத்தை வியப்புக்குள்ளாக்கிய சோமேட்டோ ஊழியரின் வீடியோ!

இந்த நிலையில் பணத்தால் செய்யப்பட்ட கேக்கின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ப்ரோக்கோலியில் இவ்வளவு நன்மைகளா?
சர்க்கரை பதில் வெல்லம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?
சாப்பாட்டில் நெய் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
உறவுகளில் நம்பிக்கையை வளர்க்க ஈஸியான டிப்ஸ்!