Viral Video : மனிதர்களை போல் இரண்டு கால்களால் நடக்கும் குரங்கு.. ஏன் தெரியுமா?.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Monkey | இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், குரங்கு ஒன்று மனிதர்களை போல இரண்டு கால்களின் நடந்து வருகிறது. அதை சிலர் தங்களது மொபைல் போன்களில் வீடியோ எடுக்கின்றனர். தான் நடந்து செல்லும் வழியில் மனிதர்கள் இருப்பதை கண்ட அந்த குரங்கு, எப்படி இரண்டு கால்களில் நடந்து வந்ததோ, அதே போல இரண்டு கால்களால் வேகமாக ஓடுகிறது.
சமூக வலைத்தளங்களின் அசாத்திய வேகத்தால் எந்த ஒரு அசாத்திய அல்லது ஆச்சர்யமான நிகழ்வுகள் நடந்தாலும் அது உடனடியாக உலகம் முழுவதும் சென்று சேர்ந்து விடுகிறது. அந்த வகையில், குரங்கு ஒன்று மனிதர்களை போல இரண்டு கால்களில் நடப்பது, மற்றும் ஓடுவது குறித்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. குரங்கு மனிதர்களை போல இரண்டு கால்களின் நடப்பதை ஆரம்பத்தில் வேடிக்கையாக நினைத்த இணைய வாசிகள், குரங்கு ஏன் அப்படி நடக்கிறது என்பது தெரிந்ததும் அதன் மீது இரக்கம் கொணடு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த குரங்கு ஏன் மனிதர்களை போல இரண்டு கால்களில் நடக்கிறது, அதற்கு என்ன ஆனது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
The images are from a natural life park abroad. A monkey that lost an arm learned to walk on two legs.
— Tansu Yegen (@TansuYegen) November 28, 2024
இணையத்தில் வைரலாகும் குரங்கின் வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், குரங்கு ஒன்று மனிதர்களை போல் இரண்டு கால்களின் நடந்து வருகிறது. அதை சிலர் தங்களது மொபைல் போன்களில் வீடியோ எடுக்கின்றனர். தான் நடந்து செல்லும் வழியில் மனிதர்கள் இருப்பதை கண்ட அந்த குரங்கு, எப்படி இரண்டு கால்களில் நடந்து வந்ததோ, அதே போல இரண்டு கால்களால் வேகமாக ஓடுகிறது. சிறிது தூரம் சென்று பிறகு மீண்டும் மெதுவாக நடக்க தொடங்குகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் பகிரப்பட்ட குரங்கின் வீடியோ
குரங்கு இரண்டு கால்களில் மனிதர்களை போல நடக்கும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து ஒருவர் பதிவிட்டுள்ளார். அதில், இந்த வீடியோ வெளிநாட்டு தேசிய பூங்காவில் எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார். மேலும், அந்த குரங்கு விபத்தில் தனது கையை இழந்த நிலையில் இவ்வாறு இரண்டு கால்களால் நடப்பதாக அவர் தனது பதிவில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Viral Video : விமான குழுவை தாக்கி விமானத்தை கடத்த முயன்ற பயணி.. இணையத்தில் வைரலாகும் பரபரப்பு காட்சிகள்!
குரங்கு மனிதர்களை போல நடக்க காரணம் என்ன?
பொதுவாக குரங்குகள் தங்களின் இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களை கொண்டு தவழ்ந்து செல்லும் இயல்பை கொண்டது. அவை தனது கை மற்றும் கால்களை பயன்படுத்தி மரம், மலை, உயர்ந்த இடங்களை ஏறும். ஆனால், இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, இயல்பான குரங்குகளை போல் இல்லாமல், ஒரு குரங்கு மனிதர்களை போல இரண்டு கால்களால் நடந்து செல்கிறது. அது பார்ப்பதற்கு ஆச்சர்யமாகவும் அதே சமயம் வேடிக்கையாகவும் உள்ளது. ஆனால், குரங்கு தனது கையை இழந்த நிலையில் மற்ற குரங்குகளை போல தவழ்ந்து செல்லாமல் மனிதர்களை போல நடக்கிறது. குரங்கு இவ்வாறு நடப்பதற்கான காரணத்தை தெரிந்துக்கொண்ட இணைய வாசிகள் நெகிழ்ச்சியுடன் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க : Viral Photo : விநாயகர் புகைப்படத்துடன் கூடிய காலணிகள் மற்றும் உள்ளாடைகள்.. Walmart-க்கு குவியும் கண்டனங்கள்!
இணையத்தில் குவியும் கருத்துக்கள்
குரங்கு தனக்கு ஏற்பட்ட உடல் பாதிப்பு காரணமாக இரண்டு கால்களில் நடப்பதை அறிந்துக்கொண்ட நெட்டிசன்கள் இந்த குரங்குக்கு இருக்கும் தன்நம்பிக்கை அனைவருக்கும் இருக்க வேண்டும் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.